|
இரண்டாம் பாகம்
மதீனமா நகரத்தின்கண்
இருக்குஞ் சமயத்தில், மேன்மையைக் கொண்ட அவர்களது சரீரமானது தடுமாறும் வண்ணம் துன்பத்தைச்
செய்கின்ற நோயானது வந்து சேர,. அதனால் மிகவுந் தளர்வடைந்தார்கள். உடனே ஆயிரம் பணாமகுடங்களைக்
கொண்ட ஆதிசேடனால் தாங்கப்பட்ட இப்பூமியைப் பொதுவற ஆட்சி செய்கின்ற அரசரான நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த எட்டுப் பெயர்களையும் பார்த்து
மடையானது செறிந்த பொலிவையுடைய புறுக்கானுல் மஜீதென்னும் வேதமானது அலம்பா நிற்குஞ் செந்நிறத்தைக்
கொண்ட தங்களது நாவினாற் சந்தோஷத்தோடுந் தெரிந்து சொல்லுவார்கள்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
5014.
வரிநெடுங் கழுத்த
னீரு மருந்தெனு மதனின் பாலும்
புரையற வருந்தி
னீரே லியாக்கையிற் பொறுத்துத் தோன்றும்
பருவர லணங்கு நீங்கிப்
படிவமார்ந் துறைவி ரென்னச்
சுருதிநூன் மறாத நாவாற்
சொற்றன ரவர்கட் கன்றே.
3
(இ-ள்) வரியைக்
கொண்ட நீண்ட கழுத்தையுடைய ஒட்டகத்தின் நீரையும், மருந்தென்று சொல்லா நிற்கும் அவ்வொட்டகத்தின்
பாலையுங் குற்றமறும் வண்ணம் நீங்களுண்பீர்களேயானால் உங்களது சரீரத்திற் பொறுத்துத் தோன்றாநிற்குந்
துன்பத்தைச் செய்கின்ற பிணியானது அகன்று நல்ல வடிவத்தைப் பொருந்தி யிருப்பீர்களென்று வேதசாஸ்திரங்களகலாத
நாவினால் அவர்களுக்குக் கூறினார்கள்.
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
5015.
தொடுகடல் ஞால
முழுதுமோர் புயத்திற்
பரித்திடுந்
தோன்றலை நோக்கிப்
பிடர்செறி மதத்த
வரிநெடுங் கழுத்தன்
மடியினிற்
பிலற்றிய பாலு
முடைசெறி நீரு
மருந்திடக் கிடையா
தெனமொழிந்
தனரரும் பாவ
மடைகிடந் திருண்ட
கொடியபுன் மனத்த
ராகிய வெண்மரு
மன்றே.
4
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு கூற, அரிய பாதகமானது அடையாகக் கிடக்கப் பெற்று இருட்சியுற்ற கொடிய சிறுமையான இதயத்தினர்களாகிய
அவ்வெட்டுப் பெயர்களும் சகரரால்
|