|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு
சொல்ல அவர்கள், வணங்கிய அரசர்களது இரத்தினங்க ளழுத்திய கிரீடங்களா லிடறப்பெற்றுக் களங்கமானது
இருந்து பிரகாசியா நிற்கும் வீரக்கழலைத் தரித்த அந்நபிகட் பெருமானாரவர்களது தாமரை மலரைப்
போன்ற பாதத்திற் பணிந்து முட்களால் நெருங்கப் பெற்று மரக்கிளைகள் மலர்ந்து ஓங்கிய தோப்புகளையுடைய
காட்டினகத்து நிறையும் ஒட்டகங்களின் பக்கத்தில் தங்கிக் கொழுப்பினது உவரானது கிடக்கப் பெற்றுத்
தீய வாசனையானது பரிமளிக்கா நிற்கும் நீரோடு பாலையுமருந்த, வெவ்விய நோயோடு அவர்களது துன்பமுமுடைந்து
சென்றன. சரீரமானது பருத்து இனிமையோடு மிருக்கின்ற அந்தக் காலத்தில்.
5018.
உடைதிரைக் கடல்கான்
றெழுந்தவெவ் விடம்போ
லுருவெடுத் திடும்வய
வீரர்
கடையுக மளவு நின்றிடு
மறைநேர்
கடந்துபுன்
குபிரினைத் தொடர்ந்தங்
கடையுடைத் தெறியுங்
கோலுடைத் தொறுவ
ரனைவரு மெலிதர
வீழ்த்தி
நடைபடிந் திடுங்காற்
றொறுக்கணங் கவர்ந்து
போயினர்
நரகிருட் புகுவார்.
7
(இ-ள்)
கரைகளைத் தகர்க்கின்ற அலைகளையுடைய சமுத்திரத்தினிடத்துப் பிரகாசித் தெழுந்த வெவ்விய விடத்தை
போலும் வடிவத்தை யெடுத்த விஜயத்தைக் கொண்ட வீரர்களான நரகலோகமாகிய அந்தகாரத்திற்
புகுகின்ற அவர்கள், யுகாந்தபரியந்தம் நிலையாக நிற்கும் புறுக்கானுல் கரீமென்னும் தேவமார்க்கத்தைத்
தாண்டித் தாழ்வைக் கொண்ட குபிர்மார்க்கத்தைப் பின்பற்றி அங்கே அடைகளைத் தகர்த்து வீசா
நிற்குங் கோல்களையுடைய இடையர்க ளெல்லாரும் மெலிவடையும் வண்ணம் அவர்களைப் பூமியில் விழும்படிச்
செய்து நடையானது படியாநிற்குங் காற்களையுடைய தொறுக் கூட்டங்களை கவர்ந்து கொண்டு சென்றார்கள்.
5019.
தருமறை வேத
மொழிசெவி யறியாத்
தறுகணர்
கொடியவர் நாளு
மிருளுறு முறனிக்
கூட்டத்தா ரெண்ம
ரியற்றிடும்
பாதக மனைத்தும்
வரியளி யலம்பு
மலர்த்தொடை வேய்ந்த
மணிக்குடந்
துரந்ததோட் செம்ம
றிருமல ரடியின்
வீழ்ந்துவாய் புதைத்துச்
செப்பினன்
றொறுவரி லொருவன்.
8
|