|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு போக, இடையர்களில் ஓரிடையன் இரகசியங்களைக் கொடுக்கின்ற புறுக்கானுல் மஜீதென்னும்
வேதவசனங்களைக் காதுகளாலுணராத குரூரர்களுந் துட்டர்களுமாகிய பிரதி தினமும் மருட்சியைப் பொருந்திய
அந்த உறனிக் கூட்டத்தார்களெட்டுப் பெயர்களுஞ் செய்த கொடுமைக ளெல்லாவற்றையும் இரேகைகளைக்
கொண்ட வண்டுகள் ஒலிக்கா நிற்கும் புஷ்பமாலையைத் தரித்த இரத்தினக் கும்பத்தைத் தமக்கு நிகரில்லையென்று
ஒட்டிய புயங்களையுடைய அரசராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் கௌனைன்
ஷபீகுல் முதுனபீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது
தெய்வீகந் தங்கிய தாமரை மலரையொத்த பாதங்களிற் பணிந்து வாய் பொத்திச் சொன்னான்.
5020.
கலிபுறந் துரக்கு
மொருதனிக் கோலாற்
காத்திடு
நபியுளம் வெதும்பி
மலையென வளர்ந்த
வுலம்பொரு திண்டோண்
மன்னவர்
மதிமுக நோக்கி
நிலையிலா
வுறனிக் கூட்டத்தா ரென்னு
நீசரைப்
பிடித்துவம் மென்ன
வொலிகுரற் பேழ்வாய்
மடங்கலே றென்ன
வுவந்தெழுந்
தனர்சில வீரர்.
9
(இ-ள்) அவன்
அவ்வாறு சொல்ல, வறுமையை நில்லாமற் பின்புறமா யோடச் செய்யும் ஒப்பற்ற ஏகச்செங்கோலினால்
இவ்வுலகத்தைக் காக்கா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் அதைக் கேள்வியுற்று மனமானது வாடப் பெற்று மலையை போலும் ஓங்கிய திரளைக் கல்லை நிகர்த்த
திண்ணிய தோள்களையுடைய அரசர்களான அசுஹாபிமார்களது சந்திரனையொத்த வதனத்தைப் பார்த்து நிலையற்ற
உறனிக் கூட்டத்தாரென்று சொல்லு மீனர்களைப் பிடித்துக் கொண்டு இங்கே வாருங்களென்று கட்டளை
செய்ய, சில வீரர்களாகிய அசுஹாபிமார்கள் சத்திக்கின்ற முழக்கத்தையும் பெரிய வாயையுமுடைய
ஆண் சிங்கத்தைப் போன்று மகிழ்ந்தெழும்பினார்கள்.
5021.
வரைத்தடத் திண்டோண்
முகம்மது கமல
மலரடி யிணையினை
யிறைஞ்சி
யிரைத்திடுங்
கழற்கால் பூட்டினர் கவச
மிட்டனர்
தொட்டனர் தொடுதோ
|