|
இரண்டாம் பாகம்
னிறைத்தவிற் கதிர்வாட்
கணைகவண் சூல
நேமிதோ
மரமழுத் தாங்கி
விரைத்தவ ணேகி
வளைந்தனர் நிரையை
மீட்டன ரெண்மரும்
வெருவ.
10
(இ-ள்) அவ்வாறெழும்பிய
அவர்கள் மலையைப் போன்ற விசாலமாகிய பெரிய தோள்களையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது தாமரை மலரையொத்த இருபாதங்களையும் பணிந்து காலின்கண்
ஒலிக்கா நிற்கும் வீரக்கழலைத் தரித்துத் தேகத்தின்கண் இரும்புச் சட்டை பூண்டு பாதத்தின்கண்
பாதரட்சையணிந்து நிறைத்த கோதண்டம், பிரகாசத்தைக் கொண்ட வாள், அம்பு, கவண்கல், சூலம்,
சக்கரம், தண்டம், எறியிரும்பாகிய இவைகளைத் தாங்கி விரைவாக அங்கே போய் அந்த உறனிக்
கூட்டத்தார்களாகிய எட்டுப் பெயர்களும் அஞ்சும் வண்ணம் வளைந்து அத்தொறுக் கூட்டங்களை மீட்டினார்கள்.
5022.
தாக்கினர் கரத்தைப்
பின்னுறப் பிணித்துத்
தளர்வறக்
கயிற்றினா லிறுக்கி
வீக்கினர் நடத்தித்
தொறுக்கணஞ் சாய்த்து
விரிதலைப்
பொரியரைக் கான
நீக்கினர் வேலை
யறலறப் பருகு
நிழன்மழை
தவழ்கொடி நுடங்கு
கோக்கடை மறுகுங்
கடந்துமா மதமார்
குருநபி மலரடி
தொழுதார்.
11
(இ-ள்) அவ்வாறு
மீட்டி அவர்களை எதிர்த்து அவர்களது கைகளைப் பின்னாற் பொருந்தும்படி பிணித்துத் தளர்வறும்
வண்ணங் கயிற்றினாலிறுக்கிக் கட்டி நடத்தி அத்தொறுக் கூட்டங்களையுஞ் சாய்த்துக் கொண்டு
விரிந்த தலையையும் பொரிகளைப் பெற்ற அரையையுமுடைய மரங்கள் செறிந்த அக்கானகத்தை யொழித்துச்
சமுத்திரத்தை நீரானதற்றுப் போகும் வண்ண முண்ணுங் குளிர்ச்சி பொருந்திய மேகங்கள் தவழா நிற்குங்
கொடிக ளசைகின்ற அரசவீதிகளையும் கடை வீதிகளையுந் தாண்டிப் பெருமை பொருந்திய சமயத்தையுற்ற
குருவாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது
முஸ்தபா காத்திமுல் அன்பியா ஷபீகுல் முதுனபீன் ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களது தாமரை மலரை நிகர்த்த பாதங்களை வணங்கினார்கள்.
|