|
இரண்டாம் பாகம்
5023.
அருட்கடம் பூண்ட
மலர்விழிக் குரிசி
லடிதொழு மன்னரை
நோக்கி
மருக்கமழ் புயத்தீ
ரறநிலை தவறும்
வன்கணர்க்
காக்கினை யெனவென்
றுரைத்தனர் காலை
யிறையவ னருளா
லுயர்நிலை
யிழிந்துவா னவர்கோன்
றரைத்தலத் திறங்கி
யாயத்தொன் றுரைத்துச்
சார்ந்தனர் நபியுள மகிழ.
12
(இ-ள்)
கருணையாகிய கடத்தைப் பூண்ட தாமரை மலரை நிகர்த்த கண்களையுடைய குரிசிலான நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் கௌனைன் ஷபீகுல் முதுனபீன் காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு தங்களது பாதங்களில் வணங்கா நிற்கும்
அரசர்களான அசுஹாபிமார்களைப் பார்த்து வாசனையானது பரிமளியா நிற்குந் தோள்களையுடைய
அசுஹாபிமார்களே! புண்ணிய நிலையைவிட்டும் பிசகிய குரூரர்களுக்குத் தண்டனையானது யாது? என்று கேட்டார்கள்.
அப்பொழுதே யாவருக்கும் இறையவனான அல்லா ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் கட்டளையினால் தேவர்களான
மலாயிக்கத்துமார்களுக்கு அதிபதியாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலாமவர்கள் வானலோகத்தை விட்டு நீங்கி
இப்பூலோகத்தின் கண்ணிறங்கி அந்நாயகம் நபிகட் பெருமானார் நபி சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களது இதயமானது சந்தோஷமடையும் வண்ணம் ஓர் வேத வசனத்தைக் கூறி விட்டுப் போனார்கள்.
5024.
வீறுபெற் றுயர்ந்த
வாயத்தின் பொருளை
விரித்தெடுத்
தியாவர்க்கு மியம்பி
மாறுகொண் டெழுந்த
கள்வரெண் மரையும்
வருந்திடக்
கால்கர மாறாய்க்
கோறல்செய் திடுமி
னென்றன ரறுகாற்
குளித்திடு
மிதித்தலிற் பிதிர்ந்து
தேறல்கொப்
பிளிக்கு நறுமலர்த் தெரியற்
செம்மல்செம்
மறைதவழ் வாயால்.
13
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு போக, வண்டுகள் குளித்திடும் மிதித்தலினாற் சிதறித் தேனைக் காக்கா நிற்கும் நறிய
புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த செம்மலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது
|