|
இரண்டாம் பாகம்
முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் செம்மையாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது தவழா நிற்கும்
வாயினாற் பெருமை பெற்றோங்கிய அந்த வேத வசனத்தின் அருத்தத்தை விரித்து எடுத்து
அனைவருக்குங் கூறி விரோதத்தை இதயத்தின்கண் கொண்டெழும்பிய அந்தத் திருடர்களெட்டுப் பெயர்களையும்
வேதனைப் படும் வண்ணம் மாறுகால் மாறுகையாக வெட்டி விடுங்களென்று கட்டளை செய்தார்கள்.
5025.
சுணங்கணி கருங்கட்
டடமுலை யுமிழுந்
துணைவரைப்
புயத்தினர் கொடுபோய்
மணங்கெழு முரச முழங்கிடு
மதீன
மாநகர்ப்
புறத்தினி லிருத்த
நிணங்கமழ்
கருவிக் குரம்பைகள் சுமந்த
மஞ்சிக னிழல்விரிந்
திலங்குங்
கணஞ்செறி கத்தி
யொன்றினை யெடுத்துத்
தீட்டினன்
கனற்பொறி தெறிப்ப.
14
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு கட்டளையிட, தேமலைப் பூண்ட கரிய சிலீமுகத்தையுடைய பெரிய தனங்களாற் கொப்பளியா நிற்கும்
மலையைப் போன்ற இரு தோள்களையுடைய அசுஹாபிமார்கள் அவர்களைக் கொண்டு போய் ஓங்கா நிற்கும்
மணமுரசமானது ஒலிக்குந் திருமதீனமாநகரத்திற்கு வெளிப்புறத்திலிருந்த, புலால் நாற்றமானது பரிமளிக்கின்ற
ஆயுதங்களையுடைய கூடுகளைத் தாங்கிய ஓர் நாவிதன் பிரகாசமானது பரவி ஒளிரா நிற்குந் திரட்சியானது
நெருங்கப் பெற்ற ஓர் கத்தியைக் கையாலெடுத்து அக்கினிப் பொறியானது சிந்தும் வண்ணங் கூராக்கினான்.
5026.
பிறையென வளைந்த
சாணையிற் றீட்டிப்
பெருஞ்சுவப்
பிரமம்வீழ்ந் துலவுங்
கறைபடுங் கயவ ரெண்மர்முன்
னிருந்து
கால்கரம்
பொருத்தினை யசைத்துக்
குறிவரை கோலிக்
கதிர்விசித் திலகுங்
கூன்செறி
வாளினா லீர்ந்தான்
றறையிட நனைந்து
சேறெழச் செந்நீர்
ததும்பிடப்
புலான்முடை கமழ.
15
(இ-ள்) பிறையைப்
போலும் வளைந்த சாணைக்கல்லில் அவ்வாறு கூராக்கிப் பெரிய நரகலோகத்தின்கண் வீழ்ந்து உலவா
நிற்குங் களங்கத்தைப் பொருந்திய கீழ்மக்களான அந்த உறனிக்
|