|
இரண்டாம் பாகம்
கூட்டத்தார்க ளெட்டுப்
பெயர்களது முன்னரு மிருந்து காலையும் கையையும் பொருத்துகளையாட்டி அடையாளமாகிய இரேகைகளை வளைத்துக்
கீறிப் பிரகாசத்தை விசித்து ஒளிரா நிற்கும் வளைவானது செறியப் பெற்ற வாளாயுதத்தினால் இப்பூமியினிடமானது
நனைந்து சேறெழும்படி இரத்தமானது கொப்பளிக்கவும், புலால் நாற்றமானது பரிமளிக்கவும் அரிந்தான்.
5027.
கால்கர மாறா
யீர்ந்திட வீழ்ந்து
புலம்பினர்
கதறினர் தேக
மேல்படு பரற்கல்
லழுந்திட வுருண்டு
விம்மினர்
பதறினர் விழிநீர்
சூல்படு மேகம்
பொழிந்தன வென்னச்
சொரிந்தனர்
வாய்வெரீஇ யினர்நற்
சீலமு மறனுந் தேய்த்தெறி
தறுகட்
டீமைசெய்
கொடுங்கொலை மனத்தார்.
16
(இ-ள்) கையையுங்
காலையும் அவ்வாறு மாறாயரிய, குரூரமாகிய நல்ல அறிவையும் புண்ணியத்தையுந் தேயும்படி செய்து வீசிய
அஞ்சாமையாகிய பாதகங்களைச் செய்கின்ற கொடிய கொலைத் தொழிலைக் கொண்ட இதயத்தையுடையவர்களான
அவர்கள் பூமியின்கண் விழுந்து புலம்பினார்கள். கதறினார்கள். தங்களது சரீரத்தின்கண்
பொருந்திய பரற்கற்கள் அழுந்த அதனாலுருண்டு ஏங்கினார்கள். நடுங்கினார்கள். கண்களிலிருந்து
நீரைக் கருப்பத்தைக் கொண்ட மேகங்கள் மழையைப் பொழிந்தாற் போலுஞ் சொரிந்தார்கள்.
அயர்ச்சியால் வாய் குளறினார்கள்.
5028.
கொலைபடு முறனிக்
கூட்டத்தி லுறைந்த
கொடியவ ரெண்மரைக்
கொடுபோ
யலையொலி யென்னச்
சிதடிகை யலம்பும்
அற்றாவெனுங்
காட்டினுட் படுத்தி
யிலைவடி வேற்கை
வயவர்க ளெழுந்து
வந்தன ரவணிடை
கிடந்தோ
ருலைவுற மயங்கி
வீழ்ந்தனர் சிலர்தம்
முயிருடைந்
திறந்தனர் சிலரே.
17
(இ-ள்) அவ்வாறு
குளறிக் கொலைபடும் உறனிக் கூட்டத்தில் தங்கிய கொடியவர்களான அந்த எட்டுப் பெயர்களையும்
தகட்டு வடிவமாகிய கூரிய வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய வீரர்களான அசுஹாபிமார்க
ளெழும்பிக் கொண்டு போய்ச்
|