|
முதற்பாகம்
இடியினது ஒலியை
யுட்கொண்ட மயிலைப் போலத் துடிக்க ஆரம்பித்தார்கள்.
428.
பதைத்தெழுந்
தய்யோ வென்னப் பாலக னப்துல் லாவை
மதித்துமுன்
னடத்திக் காந்தண் மலர்க்கரஞ் சிரசி லேற்றி
யுதித்தெழுங் கமல
பாத முதிரங்கொப் பளிப்பக் கானின்
மிதித்தலைந்
திடுங்கொம் பொப்ப விரைவினி னடந்து சென்றாள்.
38
(இ-ள்)
அவ்வாறு துடித்த ஹலிமா அவர்கள் பதைப்புற்று எழும்பி ஐயோவென்று சொல்லித் தங்களது பாலகரான
அப்துல்லாவைக் கணித்து வழிகாட்டும்படி முன்னாக நடத்திக் கொண்டு காந்தட் புஷ்பம் போலும்
தங்களது கைகளைத் தலையின் மேல் வைத்துத் தடாக முதலியவைகளில் தோன்றி எழும்பா நிற்கும்
தாமரை மலர்போன்ற இரண்டு பாதங்களிலு மிருந்து இரத்தமானது கொப்பளிக்கும்படி தரையின்கண்
மிதித்து அலைந்திடுங் கொம்பைப் போல விரைவுடன் அக்காட்டை நோக்கி நடந்து சென்றார்கள்.
429.
அயிரொழித்
தரம்போற் றேய்க்கு மறக்கொடும் பரற்கா னேகிக்
குயில்புரை
சொல்லாள் செல்லக் கோட்டுவாய் நிழலின் கண்ணே
யுயிருந்தன் மனமுங்
கண்ணு மோருருக் கண்ட தன்ன
செயிரற மகன்வா
னோக்கி நின்றிதுஞ் செய்தி கண்டாள்.
39
(இ-ள்)
குயில் போன்ற சொற்களையுடைய ஹலிமா அவர்கள் நுண்ணிய மணல்களை நீக்கி அரத்தைப்போலுந்
தேய்க்கா நிற்கும் முழுக்கொடுமை தங்கிய பரற்கற்களையுடைய அந்த வனத்தின் கண் சென்று
நானாபக்கமும் தேடிக்கொண்டு நடக்கவே, கொம்புகளையுடைய அவ்வுகாமரத்தினது நிழலின்கண் தங்களது
ஆவியும் உள்ளமும் விழிகளும் ஒரு வடிவமெடுத்து நிற்கக் கண்டதைப் போலத் தங்களது புதல்வரான
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் துன்பமற ஆகாயத்தைப் பார்த்தவர்களாக நின்றிடுஞ்
செய்கையைக் கண்டார்கள்.
430.
கண்ணினின் மணியே
யெந்தங் கருத்துறு மறிவே காமர்
விண்ணிணினிற்
குறைப டாமல் விளங்கிய மதிய மேயிம்
மண்ணினுக் கரசே
நந்த மனைக்குறு செல்வ மேயெம்
புண்ணியப் பலனே
யென்னப் பூங்கொடி யெடுத்த ணைத்தாள்.
40
(இ-ள்)
பூவாலானகொடி போல்வாராகிய ஹலிமா அவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை
அவ்வாறு கண்டவுடன் கிட்ட நெருங்கி எமது கண்களிலிரு
|