பக்கம் எண் :

சீறாப்புராணம்

185


முதற்பாகம்
 

      (இ-ள்) அதன் பின்னர் ஓர்மையுடனெழும்பினேன். எழும்பவே எனது மார்பினில் யாதொரு வடுவையுங்காணேன். அவ்விருவர்களும் மனமகிழ்ச்சியடைந்து தேகக்களிப்பினால் எனது தலையைப் பொருந்தும்படி தடவி முத்தமிட்டு உமக்கு யாதொரு மனக்கவலையும் வேண்டாம்? உம்மிடத்தில் மிகுந்த அதிசயங்களுண்டுமென்று சொல்லி ஹபிபுல்லாவென்னும் ஓர் காரணப் பெயரு மிட்டார்கள்.

 

434. ஈதலா லனேக மாற்ற மெடுத்தெடுத் தியம்பி யென்னை

    மாதவ முகம்ம தேநல் வரிசையின் மணியே யென்ன

    வோதின ரோதி வானத் துறைந்திடல் பார்த்து நின்றேன்

    றாதையு நீரு மென்னைத் தழுவவுங் கண்டே னென்றார்.

44

     (இ-ள்) இதல்லாமலும் அவர்கள் அனேகமான வார்த்தைகளை எடுத்தெடுத்துச் சொல்லி என்னை மகாதவத்தையுடைய முஹம்மதானவரே! நல்ல சங்கை பொருந்திய இரத்தினமானவரே! என்று சொல்லித் துதித்தார்கள். அவ்விதம் துதித்துவிட்டு அவர்களிருவரும் வானலோகத்தின்கண் போய்த் தங்கும்படி யான் பார்த்துக்கொண்டு நின்றேன். அப்படி நிற்கின்ற சமயத்தில் தந்தையாகிய ஆரிதவர்களும் தாயாகிய நீங்களும் என்னைக் கைகளால் கட்டியணைத்திடவுங் கண்டேனென்று சொன்னார்கள்.

 

435. உரைத்தவிச் செய்தி யெல்லா மூரவ ருடனு முற்ற

    வரைச்சிலை சுமந்த திண்டோண் மன்னனா ரிதுவு மோசைத்

    திரைக்கொடிப் பவள மன்ன சேயிழை யலிமா வுங்கேட்

    டிரைத்தக மகிழ்ச்சி பொங்கி யெழுந்துதம் பதியிற் புக்காள்.

45

     (இ-ள்) நபிநாயக முஹம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் சொல்லிய இந்தச்சமாச்சார மனைத்தையும் ஊரிலுள்ளவர்களோடும் ஆங்கு பொருந்திய மலைபோலும் கோதண்டம் தாங்கிய திண்ணிய புஜங்களையுடைய அரசரான ஆரிதவர்களும் ஒலியாநிற்கும் ஒலியைக் கொண்ட சமுத்திரத்தின் கண்ணுற்பவித்த பவளக்கொடி போன்ற சேயிழையாகிய ஹலிமா அவர்களும் கேள்வியுற்று மனக்களிப்பானது அதிகரித்தொலித்து அவ்விடத்தை விட்டும் எழும்பி நடந்துவந்து தங்களது நகரமாகிய குனையினூரிற் போய்ப் புகுந்தார்கள்.

 

கலிநிலைத்துறை

 

436. வாடு மெல்லிழைப் பாதிநுண் ணிடைமயி லலிமாக்

    கூடி வந்தவ ரனைவர்க்கு நன்மொழி கொடுத்து

    நாடி நும்மனை புகுமெனத் தமர்களை நடத்தித்

    தேடி டாப்பொருண் முகம்மதை மனைவயிற் செறித்தாள்.

46