பக்கம் எண் :

சீறாப்புராணம்

186


முதற்பாகம்
 

(இ-ள்) வாடா நிற்கும் மெல்லிய இழையிற் பாதி போலும் நுண்ணிய இடையினையுடைய மயிலாகிய ஹலிமா அவர்கள் தங்களோடு சேர்ந்து வந்த யாவர்களுக்கும் நல்ல வார்த்தைகளைப் பேசி விருப்பமுடன் உங்களது வீடுகளிற் போய்ச் சேருங்களென்றுப் பந்துக்களாகிய அவர்களை அனுப்பிவிட்டுத் தாங்கள் சம்பாதித்த செல்வமான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தங்களது வீட்டின்கண் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

 

437. வனந்த னிற்செலுஞ் சிறுவரோ டிணக்கிலார் மறியி

    னினந்த னிற்றொடர்ந் தேகவு மனத்தினி லியையார்

    சினந்த சின்மொழி மறந்தொரு நாளினுஞ் செப்பா

    ரனந்த ரத்தவர் மனையினிற் புகுத்தியு மறியார். 

47

     (இ-ள்) அன்றுமுதல் ஹலிமா அவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் காட்டினிடமாக ஆடு மேய்க்கும்படி செல்லும் பாலியர்களோடு செல்லும்படி யுடன்படுத்திலர்கள். தங்களது பந்துக்க ளுடன் சேர்ந்து செல்லவும் மனசின்கண் பொருந்தார்கள். கோபித்த அற்ப வார்த்தைகளை மறதியாக ஒருநாளாயினும் பேசமாட்டார்கள். தங்களுக்குச் சொந்தமான இனத்தவர்களின் வீடுகளிற் போகும்படி செய்து மறியார்கள்.

 

438. சேம மாகிய பொருளினைக் காத்திடுந் திறம்போல்

    வாம மாமணி முகம்மதை வளர்க்குமந் நாளிற்

    றாம வொண்புயத் தினர்நசு றானிக டடஞ்சூழ்

    பூம லர்ப்பொழில் குனையின்வந் தடைந்தனர் புதிதாய்.

48

     (இ-ள்) இந்தப்படி ஹலிமா அவர்கள் அழகிய மாணிக்கமான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இன்பமாகிய பொருளைக் காவல் செய்திருந்திடுந் தன்மை போலக் காவல்செய்து வளர்த்த வராநிற்கும் அந்நாளில் நூதனமாய் மாலையணிந்த ஒள்ளிய தோள்களை யுடையவரான நசுறானிகள் தடாகங்கள் வளைந்த புஷ்பங்கள் விரிந்திருக்கும் சோலைகளையுடைய அந்தக் குனையின் நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

439. அபசி நாட்டினி லுறைநசு றானிக ளானோர்

    குவித ருந்தனக் கொடியலி மாவையுங் கூண்டு

    கவின்ப ழுத்தொழு கியமுகம் மதுவையுங் கண்டு

    செவியி ரகசிய மொருவருக் கொருவர்செப் பினரால்.

49