|
முதற்பாகம்
(இ-ள்) ஹபசி
நாட்டில் வாசஞ்செய்யும் அந்த நசுறானியானவர்கள் திரண்ட ஸ்தனபாரங்களை யுடைய கொடிபோலும்
ஹலிமா அவர்களையும் அழகானது கூடிக்கனிந்து வழிந்த நபி முஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களையும் பார்த்து ஒருவருக்கொருவர் தங்களது காதுகளில் இரகசியமான வார்த்தைகளைப்
பேசினார்கள்.
440.
நபியெ னும்பெரு
முத்திரைக் குறியும்பொன் னகர்க்கும்
புவியி னுக்குமோ
ரரசெனப் பொருந்திலக் கணமு
மவிரொ ளித்திரு
மேனியு மவயவத் தழகு
மிவையெ லாமறிந்
திவர்நபி யெனவுளத் திசைந்தார்.
50
(இ-ள்)
அவ்விதம் பேசிய நசுறானிகள், நபியென்னும் பெரிய இலாஞ்சனையினது அடையாளமும், சுவர்க்க
லோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஒப்பற்ற இராஜரென்று சொல்லும்படி பொருந்திய
இலட்சணங்களும், தெய்வீகமுற்ற சரீரத்தின்கண் பிரகாசிக்கின்ற பிரபையும், அவயவங்களின்
அழகும், ஆகிய இவைகளனைத்தையும் உணர்ந்து இவர் நபிதானென்று மனசின் கண் பொருந்தினார்கள்.
441.
புனைம ணிப்புய
ராரிதுக் குயிரெனப் பொருந்து
மனைவி யாகிய
மயிலலி மாமுனம் வந்து
கனைத ருங்கட லமுதென
வாழ்த்தியுட் களித்து
வினைய மாய்நசு
றானிகள் சிலமொழி விரித்தார்.
51
(இ-ள்)
ஹபசி நாட்டாரான அந்த நசுறானிகள் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோள்களையுடைய ஆரிது அவர்களுக்கு
ஜீவனைப் போலப் பொருந்தா நிற்கும் நாயகியாகிய மயில்போலும் ஹலிமா அவர்களின் முன்னர்
வந்து ஒலியாநிற்கும் சமுத்திரத்தின்கண் ணுற்பவித்த தேவாமிர்தத்தைப் போல இனிமைபொருந்திய
பலவித வார்த்தைகளைச் சொல்லிப் புகழ்ந்து மனமகிழ்ச்சியடைந்து வணக்கத்தோடும் சில
வார்த்தைகளை விரித்துச் சொல்வார்கள்.
442.
உங்க டம்மனைக்
குளதொரு குழந்தைநும் முயிர்போ
லெங்க டம்மனத்
துவகையால் வளர்ப்பதற் கிசைந்தோந்
திங்கள் வாணுத
லளித்தியேற் செல்வமுஞ் செருக்கும்
பொங்கு மாநிதி
தருகுவ மியாமெனப் புகன்றார்.
52
(இ-ள்)
இளஞ்சந்திரன்போலும் பிரகாசம் பொருந்திய நெற்றியையுடைய ஹலிமா வானவர்களே! உங்களது
உயிரைப் போன்ற ஒரு பிள்ளையானது உங்களின் வீட்டின் கண்ணுள்ளது. அப்பிள்ளையை நாங்கள்
எங்கள் மனவிருப்பத்தோடும்
|