முதற்பாகம்
(இ-ள்) அவ்விதம்
அவர்கள் மகிழ்ச்சியடையவே இதழ்களையுடைய புஷ்பங்களைப் பிளந்து மதுவானது ஒழுக, அதைக் கணக்கற்ற
வண்டுக் கூட்டங்கள் வாய் நிறைத்து அருந்தி இசைபாடாநிற்கும் மலர்மாலையணிந்த புயங்களை யுடையாரான
சகலகலைகளுமுணர்ந்த ஹபீபுல்லாவென்னும் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களுக்கு நிலைமை பெற ஒப்பில்லாத வயசானது ஏழாகப் பூரணப்பட்டது.
528. கனைகுரன் மும்மதக்
களிற்றினி மத்தகத்
தினையுறக்
கீண்டுயிர் குடிக்குஞ் சீயமே
யனையவ ரப்துல்முத்
தலிபு தன்றிரு
மனையர செனநபி
வளரு நாளினில்.
47
(இ-ள்)
அப்போது ஒலிக்காநின்ற முழக்கத்தினையும் கன்னம் கபோலம் கோசமென்னு மூன்று மதத்தினையு முடைய
யானைகளினது சென்னியைப் பொருந்தும்படி கிழித்து அவற்றின் ஆவியை அருத்தா நிற்கும் சிங்கத்தைப்
போன்றவரான அப்துல் முத்தலிபவர்களின் தெய்வீகமுற்ற வீட்டிற்கு வேந்தரென்று சொல்லும்படி நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் வளர்ந்து வரும் தினத்தில்.
529. தழையறக்
கருகிநீர்த் தடங்கள் வற்றிமெய்க்
குழைவொடு கானலைக்
குறித்து நீரென
வுழையின
மோடியுள் ளொடுங்கப் பாரிடை
மழையறச்
சனமெலா மறுக்க முற்றதே.
48
(இ-ள்)
இப்பூலோகத்தின்கண் மரமுதலியவைகளின் தளிர்களானவை சூரிய வெப்பத்தினால் முழுதுந் தீய்ந்து
சலத்தையுடைய குளங்களெல்லாம் காய்ந்து சரீரவாட்டத்துடன்
மான் கூட்டங்கள் சூரிய கிரணத்தை நீரென்று மதிப்பிட்டு ஓடி மனமானது சோரும்படி மழையென்பதறவே
இல்லாமற் போக மனுஷியர்க ளனைவரும் மனக் குழப்பமடைந்தார்கள்.
530. புவியிடை
மழைபொழி யாத நோவினா
லபுதுல்முத் தலிபெனு
மரசர் நாயகர்
நபிதனைக் கூட்டிமுன்
னடத்தி யாங்கொரு
தவிசெனு முரம்புறு
தலத்தி ருத்தினார்.
49
(இ-ள்)
அவ்வாறு பூமியின்கண் மழையானது பெய்யாத வருத்தத்தினால் அப்துல் முத்தலிபென்று சொல்லும் வேந்தர்களுக்கெல்லாம்
நாயகமானவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைக் கூட்டி முன்னால்
|