முதற்பாகம்
534. நபிதிரு வயதிரு
நான்குந் திங்களுங்
கவினுற விரண்டுசென்
றதற்பின் காணுநாட்
புவியிடின் பத்துறப்
பொருந்தும் போதினி
லபுதுல்முத் தலிபுமே
லுலக டைந்தனர்.
53
(இ-ள்)
அப்போது நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அழகிய வயசானது எட்டும் செம்மை
பொருந்தும்படி இரண்டு மாதங்களும் கழிந்து அதன் பின்னர் பூமியின்கண் பார்க்கக் கூடிய தினங்கள்
பத்து உறப் பொருந்துங் காலத்தில் அப்துல் முத்தலிபவர்கள் நிரியாணமாய் இவ்வுலகை விட்டும்
விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.
535. விற்கர னப்துல்முத்
தலிபு மேலுல
கிற்புகுந் தாரென
வினமு மக்களுங்
கற்புடை மகளிருங்
கமல வாண்முகம்
பொற்பறப்
புடைத்தழு தேங்கிப் பொங்கினார்.
54
(இ-ள்)
அவ்வாறு கோதண்டந் தாங்கிய கையினையுடைய அப்துல் முத்தலிபவர்கள் தேகவியோகமாய் விண்ணுலகம்
போய் சேர்ந்தார்களென்று அவர்களின் பந்து ஜனங்களும் புத்திரர்களும் கற்பு நிலைமையினையுடைய
பெண்களும் தங்களது தாமரைமலர் போலு மொள்ளிய முகங்களின் அழகானது கெடும்படி கைகளினாலடித்து
இரங்கி அழுது சந்தித்தார்கள்.
536. விதிமறை
நூலவர் விருத்தர் மன்னவ
ரிதமுற வந்தடுத்
திரங்கும் பேர்க்கெலா
மதிபல
சொல்லியுட் புழுக்க மாற்றியே
யதிவிதத் துடனெடுத்
தடக்கி னாரரோ.
55
(இ-ள்)
அவ்விதம் சத்திக்கவே உண்மை பொருந்திய வேதநூற்களையுடைய பண்டிதர்களும் வயதால் முதிர்ந்த
பருவத்தையுடைய அரசர்களும் இனிமை பொருந்தும்படி அவ்விடத்தில் வந்து சேர்ந்து அங்கு அழுகின்ற
யாவர்களுக்கும் அனேகமான அறிவுகளைச் சொல்லி அவர்களின் மனவெப்பத்தைத் தணித்து அப்துல் முத்தலிபவர்களை
அதிவிதத்தோடு மெடுத்தடக்கஞ் செய்தார்கள்.
537. சடங்குள தெவ்வையுந்
துடைத்துத் தன்குல
மடங்கலே
றனையவர் கூண்டு மாசிலாத்
தடம்புய முகம்மதை
வளர்க்கத் தக்கதோ
ரிடம்பெறு
மனத்தவ ரெவரென் றோதினார்.
56
(இ-ள்)
அன்றியும் தங்களது கோத்திரத்தி லுள்ள சிங்கேற்றைப் போன்ற யாவர்களும் ஒன்று சேர்ந்து அப்துல்
முத்தலிபவர்களுக்குச்
|