பக்கம் எண் :

சீறாப்புராணம்

218


முதற்பாகம்
 

செய்ய வேண்டும்படி யுள்ளதான கிரியைகள் அனைத்தையுஞ் செய்து முடித்துக் குற்றமில்லாத பெருமை தங்கிய தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இனிமேல் வளர்ப்பதற்குத் தகுதியான ஒப்பற்ற விசாலம் பொருந்திய மனசை யுடையவர்கள் நம்மில் யாவர்களென்று கேட்டார்கள்.

 

     538. அம்மொழி கேட்டபீத் தாலி பாகிய

        மும்மதக் கரியுயிர் முகம்ம துக்கினி

        யெம்மனை யலதுவே றிடமுண் டோவெனச்

        செம்மலர்க் கரத்தெடுத் தணைத்துச் சென்றனர்.

57

     (இ-ள்) அவ்விதம் குடும்பத்தார்கள் கேட்ட அந்த வார்த்தைகளைக் காதுகளினாற் கேள்வியுற்று அபீத்தாலிபாகிய மும்மதங்களையுடைய யானை யானவர்கள் எமது ஜீவனான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு இனிமேல் எமது வீடல்லாமல் வேறேயிடங்களுண்டுமா? இல்லை என்று சொல்லி அவர்களைத் தங்களது சிவந்த தாமரைப் புஷ்பம் போலும் கைகளினா லெடுத்து மார்போடு மணைத்துக் கொண்டு தங்கள் வீட்டை நோக்கி நடந்து சென்றார்கள்.