பக்கம் எண் :

சீறாப்புராணம்

220


முதற்பாகம்
 

நிறத்தையுடைய எருமையினது கூட்டங்கள் ஒப்பற்ற பெரிய சமுத்திரத்தைப் போல அதிகரித்து வளர்ந்தன. ஆட்டுக் கூட்டங்களும் பெருகின. பால் தயிர் முதலியவைகள் குறைவில்லாது அன்னிய ஜனங்களும் வாங்கிக் குடிக்கும்படிப் பெரிதான செல்வத்தைச் சம்பாதித்தார்கள்.

 

542. நான மெய்கமழ் வேதநா யகனம திடத்தி

    லான தாலிவை பெற்றன மெனவக மகிழ்ந்து

    வானு லாவுவெண் புகழபித் தாலிபு மன்னர்

    தேனு லாம்பொழிற் சாமினிற் செலக்கரு தினரே.

4

     (இ-ள்) அப்போது ஆகாயத்தின்கண் உலாவா நிற்கும் வெள்ளிய கீர்த்தியையுடைய அபீத்தாலிபாகிய அரசரவர்கள் காத்திரத்தின்கண் கஸ்தூரி வாசனை கமழா நின்ற வேதநாயகரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் நமது பக்கத்திலானதினால் நாம் இவ்விதமான செல்வங்களனைத்தையும் அடைந்தோமென்று மனமகிழ்ச்சியுற்றுத் தேனானது உலவப் பெற்ற சோலைகளையுடைய ஷாம் இராச்சியத்திற்குப் போகும்படி சிந்தையின்கண் எண்ணினார்கள்.

 

543. வெள்ளி வெண்டகட் டொளிர்நிலா வெறித்தமே னிலைக

    ணள்ளி ருட்களி சீத்தெறி மக்கமா நகரிற்

    கொள்ளும் பற்பல சரக்கெவை யவையெலாங் கொண்டு

    தெள்ளி தாகித்தன் புறச்சரக் கறையையுந் திறந்தார்.

5

     (இ-ள்) அவ்வாறு எண்ணிய அத்தபீலிபவர்கள் வெண்ணிறத்தையுடைய வெள்ளியினாற்செய்த தகடுகளினாற் பிரகாசியா நிற்கும் நிலாவை வீசிய மேனிலையையுடைய மாடங்களானவை நெருங்கிய அந்தகாரத்தினது செருக்கைச் சீவி யெறியாநின்ற மக்கமா நகரத்தில் வாங்க வேண்டிய பலபலவிதமான சரக்குகள் எவைகளோ? அவைக ளெல்லாவற்றையும் தெளிவாய் வாங்கியவையல்லாத மற்றச் சரக்குகளையுடைய தங்களது அரங்குகளையும் திறந்தார்கள்.

 

544. ஏறு வாம்பரி யொட்டையி லெடுத்தெடுத் தேற்றிக்

    கூற வல்லவ ரெவரவ ரவர்க்கெலாங் கூறி

    யாற டுத்தொரு பொழில்புற விடுதிய தாகி

    யூறு தேன்குழன் மனைவியர்க் கிவையெலா முரைத்தார்.

6

     (இ-ள்) அவ்விதம் திறந்து சரக்குக ளெல்லாவற்றையும் எருதுகளிலும் தாவிச் சாடாநிற்கும் குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் எடுத்தெடுத்துச் சுமத்திப் பின்னர் தங்களின் பிரயாணச் செய்தியைச் சொல்லுவதற்குத் தகுதியுற்றவர்கள்