பக்கம் எண் :

சீறாப்புராணம்

222


முதற்பாகம்
 

      (இ-ள்) தங்களது பெரிய தகப்பனாராகிய அபீத்தாலிபவர்கள் அவ்வாறு வரவேண்டாமென்று கூறிய வார்த்தைகளுக்காக தங்களின் அரிதான கண்களிலிருந்து முகத்தைப் போலும் ஜலமானது ஒலிக்கும்படி ஏறிட்டுப் பார்த்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தெய்வீகம் பொருந்திய முகத்தை அவ்வபீத்தாலிபவர்கள் பார்த்து கீர்த்தியையுடைய எனது புதல்வரே! நீர் என்னுடன் சாமிராச்சியத்திற்கு வருவதற்கு உமது அறிவினாலுடன் பட்டீர் நாங்கள் அதற்கு வேண்டாமென்று பலவித வார்த்தைகளைச் சொல்லித் தேற்றியும் நீர் உமது சிந்தையானது தெளிந்தீரில்லலை. ஆதலால் எந்த வழியிலாயினும் நான் உம்மை விட்டும் பிரிந்து அவ்வூருக்குப் போகமாட்டேனென்று சொன்னார்கள்.

 

548. குலத்த டக்கிளைத் தாமரைக் குழுவினி னாப்ப

    ணலத்து தித்தெழுஞ் செழுமணி நபிகணா யகத்தைச்

    சிலைத்த டப்புயர் வருகெனப் பணிபல திருத்தி

    யிலைத்த டக்கதிர் வேலெடுத் தினத்துட னெழுந்தார்.

10

     (இ-ள்) அவ்விதம் சொல்லிய மலைபோலும் விசாலமுற்ற தோள்களையுடைய அபீத்தாலிபவர்கள் மேன்மை பொருந்திய குளங்களில் கூட்டமாகிய தளிர்களை யுடைய தாமரையினது மத்தியில் நன்மையோடும் பிரசன்னமாகி எழும்பாநிற்கும் செழிய இரத்தினத்தைப் போன்ற நபிகட்கெல்லாம் தலைவரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை வருவீராகவென்று சொல்லிப் பலவித ஆபரணங்களைத் தரிக்கும்படி செய்து இலைபோலும் பெருமை தங்கிய பிரகாசத்தையுடைய வேலாயுதத்தைக் கையினி லெடுத்துக் கொண்டுத் தங்களது பந்துக்களோடும் எழும்பினார்கள்.

 

549. பார்த்தி பனபூ பக்கரும் பாதையர் பலரு

    மேத்து மெய்ப்புகழ் முகம்மதைச் சூழ்தர வியைந்து

    மாத்த டக்கரி கூன்றொறுச் சுமைதிசை மலியப்

    பூத்த தாமரைக் கழனிவிட் டருநெறி புகுந்தார்.

11

      (இ-ள்) அப்போது அரசராகிய அபூபக்க ரவர்களும் வழியின் கண் சாமிராச்சியத்திற்குப் போகும்படி ஆங்குவந்த மற்றும் பேர்களும் புகழாநிற்கும் உண்மையான கீர்த்தியையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இசைந்து சூழ்ந்து வரவும், பாரங்களை யுடைய குதிரைகளும் பெருமை சூழ்ந்து வரவும், பாரங்களை யுடைய குதிரைகளும் பெருமை பொருந்திய கரிய எருதுகளும் கூனையுடைய தொறுவுகளும் நான்கு பக்கங்களிலும் மிகுதியாக மலிவுற்று வரவும் நடந்து தாமரை மலர்கள் மலர்ந்த வயலினது நிலங்களை விட்டும்