முதற்பாகம்
சாமிராச்சி யத்திற்குச்
செல்லும் அரிதான பாதையின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
550.
காறு நீங்கியே முகம்மது
வருவது கண்டு
மாறி லாதசந் தோடமு
மொன்பதாம் வயதிற்
றேறி லாமனச் சிறுவனென்
றெண்ணிய திடுக்கு
மூறு துன்பமு மின்பமு
முடன்வர நடந்தார்.
12
(இ-ள்)
அப்பொழுது அளவற்று நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருகின்றதை அபீத்தாலி பவர்கள்
பார்த்து மனசின்கண் மாறாத மகிழ்ச்சியும் அதனாற் பெருகும் இன்பமும் தேறாத அகத்தையுடைய ஒன்பதாம்
வயசின் பாலியரென்று நினைத்த அச்சமும் அதனாற்பெருகும் துன்பமும் தங்களது கூடவே வரும்படி பாதையின்கண்
நடந்து சென்றார்கள்.
551.
மடங்க லேறபீத் தாலிபென்
றோதிய மன்னர்
கடங்கொண் மும்மதக்
கரிதிரி வனத்தையுங் கடந்து
சடங்க முங்கிய சடிலமு
மிடபமுஞ் சாய்த்தே
யடங்க லுங்கொடு
நடந்தொரு தலத்தினி லானார்.
13
(இ-ள்)
அவ்வாறு சென்ற ஆண் சிங்கம் போலும் அபீத்தாலிபென்று கூறிய அரசரவர்கள் சுமைகளினால் முங்கப்பெற்ற
குதிரைகளையும் எருதுகளையும் சாய்த்து எல்லாவற்றையுங் கொண்டு கூட்டத்தைப் பெற்ற மூன்று மதங்களையுடைய
யானைகள் சஞ்சரிக்கா நின்ற காடு முதலிய பலவிடங்களையுந் தாண்டி நடந்து ஒரு தலத்தின்கண்
போய்ச் சேர்ந்தார்கள்.
552.
தக்கள தோர்புசு
றாவெனுந் தலத்தினிற் சார
மிக்க பேரொளி வெய்யவன்
மேற்றிசை சார்ந்தான்
றிக்கெ லாந்துதி செயுமபித்
தாலிபுஞ் செறிந்த
வொக்கல் சூழ்தர
வின்னுயிர்ப் புதல்வரோ டுறைந்தார்.
14
(இ-ள்)
அவ்வாறு யாவர்களும் தகுதி பொருந்திய ஒப்பற்ற புசுறாவென்று சொல்லும் இடத்தினிற் போய்ச்
சாரவும், மிகுந்த பெரிய பிரகாசத்தையுடைய சூரியனானவன் மேல் திசையிலுள்ள சமுத்திரத்தின்கண்
போய்ச் சேர்ந்தான். அப்போது எண்டிசைகளும் புகழா நிற்கும் அபீத்தாலிபவர்களும் நெருங்கிய
பந்து ஜனங்கள் சூழும்படித் தங்களது இனிமையான உயிர் போன்ற புதல்வராகிய நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களோடும் மவ்விடத்தில் தங்கியிருந்தார்கள்.
|