பக்கம் எண் :

சீறாப்புராணம்

226


முதற்பாகம்
 

      (இ-ள்) அப்பொழுது படாமகுடத்தினை யுடைய பெருமை பொருந்திய ஆதிசேடன் நெளியவும் தூசிகளானவை ஆகாயத்தில் பரக்கவும், நெருங்கிய ஒட்டகங்களையும் எருதுகளையும் ஓசையுடன் நடாத்திக் கொண்டு நீங்கள் எவ்விடத்திற்குப் போகப் பட்டவர்கள் சொல்லுங்களென்று புகைறாவென்னும் அந்தப் பண்டிதன் கேட்க; அறிஞராகிய அபீத்தாலிபவர்கள் சோலைகளையுடைய சாமிராச்சியத்திற்குப் போகப் பட்டவர்களென்று சொன்னார்கள்.

 

560. அரும்பு மென்மலர்த் தொடைதிரட் புயவபித் தாலிப்

    விரும்பிச் சாமினுக் கெழுந்தன மெனவுரை விளம்பத்

    தரும்பெ ரும்பயன் முகம்மதைச் சடுதியிற் கூட்டித்

    திரும்பு நும்மனைச் சென்மென வுரைத்தனன் றிறலோன்.

22

     (இ-ள்) தேனானது அரும்பாநிற்கும் மெல்லிய புஷ்பமாலையை யணிந்த திரண்ட தோள்களையுடைய அபீத்தாலிபவர்கள் அவ்வாறு நாங்கள் சாமிராச்சியத்திற்கு விருப்பமுற்று எழும்பினோமென்ற வார்த்தையைச் சொல்ல, உடனே வலிமையையுடைய அந்தப் பண்டிதனானவன் பெரியபலனைத் தராநின்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைக் கூட்டிக் கொண்டு சீக்கிரத்தில் நீவிரெண்ணிய சாமினுக்குப் போகாது திரும்பும். உமது வீட்டிற்குப் போகுமென்று சொன்னான்.

 

561. வெடித்த மென்மலர்த் தேனையுண் டினவெறிச் சுரும்பு

    படித்த பாட்டயர் பொழிறிகழ் சாமெனும் பதிக்குப்

    பிடித்து நோக்கிய சரக்குட னெமையொரு பேச்சி

    லடித்த லம்புக வுரைத்தசொல் லென்னென வறைந்தார்.

23

     (இ-ள்) அவ்வார்த்தைகளைக் கேட்ட அபீத்தாலி பவர்கள் மலர்ச்சியுற்ற மெல்லிய புஷ்பங்களினது தேனையருந்தி மயக்கமடைந்த வண்டுக் கூட்டங்கள் தாங்கள் பழகிய பாட்டுகளைப் பாடா நிற்கும் சோலைகளானவை விளங்கா நின்ற சாமென்னும் நகரத்திற்கு ஆகுமான பலவித சரக்குகளையும் பிடித்து அச்சரக்குகளுடன் அந்நகரை நோக்கி வந்த எங்களை ஒரு வார்த்தையில் மூலஸ்தான மாகிய எங்கள் நகரத்திற்குத் திரும்பிப் போகும்படி சொல்லிய காரணம் யாதென்று அப்பண்டிதனிடத்தில் கேட்டார்கள்.

 

562. வாட்டி றத்தபித் தாலிபு நடுங்கியுள் வருந்திக்

    கேட்ட போதினிற் புகையுறா வெனுமறைக் கிழவோன்

    பூட்டும் விற்றடக் கரமுகம் மதுதமைப் புகழ்ந்திந்

    நாட்டின் மேல்வருங் காரண மனைத்தையு நவில்வான்.

24