முதற்பாகம்
(இ-ள்) அவ்வாறு
வாளாயுதத்தில் வல்லமைபெற்ற அபீத்தாலிபவர்கள் அச்சமுற்று மனமானது நொந்து கேட்ட சமயத்தில்,
புகைறாவென்று சொல்லும் வேதங்களின் தலைமையான அப்பண்டிதன் சரமுதலியவற்றை பூட்டாநிற்கும்
வில்லினைக் கொண்ட பெருமை பொருந்திய கையினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவிசல்லமவர்களைத்
துதித்து அவர்களால் இப்பூலோகத்தின் மேல்வருங் காரணங்க ளெல்லாவற்றையுஞ் சொல்லுவான்.
563.
ஆத மக்கடந்
தலைமுறை யைம்பதின் பின்னர்
சோதி மாநபி
வருவரிந் நாளெனத் துணிந்து
பேத மற்றவ ருரைத்ததுங்
கண்டதும் பெரியோன்
வேதஞ் சொற்றது மிவரலாற்
பிறிதுவே றிலையே.
25
(இ-ள்)
யாவர்களுக்கும் மூலபிதாவாகிய ஆதமலைகிஸ்ஸலா மவர்களது புதல்வர்களின் ஐம்பதாம் தலைமுறையின்
பின்னிக் காலத்தில் பிரகாசத்தையுடைய பெருமை பொருந்திய நபியொருவர் இப்பூலோகத்தின்கண்
வருவாரென்று பேதமில்லாது அவர்கள் நிச்சயமாகச் சொன்னதும், அகத்தினது அளவிற் கெட்டாத பெரியவனான
அல்லாகுசுபுகானகுவத்த ஆலாவின் வேதங்கள் சொல்லியதும், நாம் பார்த்ததுமான அந்தநபி இவரேயல்லாமல்
வேறே அன்னிய ரொருவருமில்லை..
564.
கொலையெ கூதிகள்
வன்னசு றானியின் குலத்தோ
ரலகில் கூட்டமுண்
டப்பெருஞ் சாமினி லடைந்தாற்
றொலைவி றுன்புற
வறக்கொடு வினையொடுந் தொடர்வர்
கலைவ தன்றிநும் மிடர்தவிர்த்
திடுவதுங் கடிதே.
26
(இ-ள்)
ஆதலினால் நீங்கள் அந்தப் பெருமை பொருந்திய ஷாமி ராஜியத்தின்கண் போய்ச் சேர்ந்தால்
அங்கே கொலைத் தொழிற் புரியா நிற்கும் எகூதிகளும் கொடுமை தங்கிய நசுறானிகளி னினத்தவர்களும்
கணக்கில்லாத கூட்டமாயுண்டு. அவர்கள் இந்த முகம்மதுவினால் உங்களுக்கு ஒழியாத துன்பமானது
பொருந்தும்படி, முழுமையான கொடிய செயல்களோடும் உங்களைப் பின்பற்றுவார்கள். அப்படிப் பின்பற்றின
போதிலும் அவர்கள் கலைந்து போவார்களே யொழிய உங்களுடைய இடரைத் தவிர்ப்பதும் அவர்களுக்குக்
கடினமாகும்.
565.
நபியு மிங்கிவ ரலதுவே
றிலையிவ ணபிக்குத்
தவறெ டுத்தெவர் முடித்திட
நினைக்கினுஞ் சாரா
நபியு மோமுதி
யவரலச் சிறுவரா கையினாற்
றவிரு நும்பதி புகுமென
வுரைத்தனன் றவத்தோன்.
27
|