முதற்பாகம்
(இ-ள்) அவ்வாறு
அப்பண்டிதனானவன் அவ்விடத்தில் வந்த அந்த எகூதிகளைக் கோபித்துப் பார்த்து அவர்களின் மனமானது
கலங்கும்படி பலவித உறுதியான வார்த்தைகளை எடுத்துக்கூறி உங்களது மனத்தின் கண்ணுள்ள துற்சிந்தனைகளெல்லாவற்றையும்
இப்பொழுதே விட்டு விடுங்களென்று சொல்லி நன்மை பொருந்திய நபிறசூல் சல்லல்லாகு அலகிவசல்லமவர்களை
வாழ்த்துங்களென்று நிகழ்த்த அவ்வெகூதிகள் விரைவினில் தங்களை வந்து நெருங்கிய கொடிய செயலினது
திடத்தை விட்டும் ஒழிந்து அவ்விடத்தில் நில்லாது மற்ற இடங்களுக்கு நீங்கிச் சென்றார்கள்.
569.
ஈத லால்நசு றானிக
ளெண்ணிலொன் பதுபேர்
சீத மென்றடம்
புனைபுசு றாவினைச் சேர்ந்து
மாத வத்தின னறப்புறச்
சாலையில் வந்து
கோத றப்பணிந் திருகரஞ்
சிரத்தினிற் குவித்தார்.
31
(இ-ள்)
இதல்லாமலும் கணக்கினில் ஒன்பது பேர் நசுறானிகள் குளிர்ச்சி பொருந்திய மெல்லிய குளங்கள்
மிகுந்த புசுறாவென்னும் அத்தலத்தினையடைந்து பெரிய தவத்தினையுடைய புகைறாவென்னும் பண்டிதனது
வெளிப்புறத்தி னறச்சாலையினுட் பிரவேசித்து அவனைக் குற்றமறும்படி வணங்கி இரண்டு கைகளையுந்
தலையின்மேல் குவித்துக் கும்பிட்டார்கள்.
570.
வந்து கண்டவர்க்
கின்புறு மொழிபல வழங்கி
யெந்த வூருளீ ரெவ்விடத்
தேகுவிர் நீரென்
றந்த மிக்குறு பண்டிதன்
கேட்டபி னடைந்தோர்
சிந்தை கூர்ந்துதம்
வரவினை யெடுத்துரை செய்தார்.
32
(இ-ள்)
அழகானது மிகப் பொருந்திய பண்டிதனான அந்தப் புகைறாவென்பவன் அவ்வாறு அங்கு வந்து தன்னைத் தெரிசித்த
அவ்வெகூதிகளுக்கு இனிமை பொருந்திய பலவிதமான வார்த்தைகளைக் கூறி நீங்கள் எந்த வூரிலுள்ளவர்கள்?
இங்கு எவ்விடத்திற்குப் போகப்பட்டவர்கள்? சொல்லுங்களென்று கேட்டதின் பின், அங்கு அடைந்த
அவர்கள் தங்களது வருகையினை மனங்கூர்ந்து எடுத்துச் சொன்னார்கள்.
571.
அந்த மில்லவன்
மும்முறை யுணர்த்திய தழகாய்
நந்த மார்க்கமுஞ்
சமயமுங் கெடநமர் நலிய
வந்து தோன்றுவர்
நபியென முகம்மதிவ் வருட
மிந்த மாதமிற்
சாமினுக் கேகுவ ரெனவே.
33
(இ-ள்)
நம்முடைய மார்க்கமும் வேதங்களும் அழிந்து போகும்படியாகவும், நமது ஜனங்க ளெல்லாவரும் மெலிவை
|