முதற்பாகம்
யடையும்படியாகவும், அழகாக
முகம்மதென்னு மொருவர் நபியென்று சொல்லும்படி இவ்வுலகத்தின்கண் வந்து உதயமாகுவார். அவர் இந்த
வருஷம் இந்த மாதத்தில் ஷாமிராச்சியத்திற்குப் போகுவாரென்று முடிவில்லாதவனான அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவானவன் பூமியின்கண் இறக்கி வைத்த மூன்று வேதங்களும் அறிவித்தன.
572.
கோதி லாமறை யுரைத்தசொ
லுளத்தினிற் குறித்துச்
சூத மென்பொழில்
வளைதரு சாமினைச் சூழ்ந்த
பாதை நான்கினு
மொற்றரை யனுப்பியிப் பாதைக்
கேத மின்றிநும் பாலடைந்
தோமென விசைத்தார்.
34
(இ-ள்)
அவ்வாறு குற்றமற்ற வேதங்கள் கூறிய வார்த்தைகளை மனசின்கண் மதிப்பிட்டு வண்டுகள் பொருந்திய
மெல்லிய சோலைகள் சூழப் பெற்ற சாம்நகரத்தை வளைந்த நான்கு திக்குகளிலுமுள்ள பாதைகளிலும்
சில தூதர்களை அனுப்பி விட்டு இந்தப் பாதைக்கு நாங்கள் குற்றமில்லாது உங்களிடம் வந்து சேர்ந்தோமென்று
சொன்னார்கள்.
573.
வடிவு றும்மறை யுரைத்தது
முளதுமும் மறைக்கு
நெடிய வனபி யுதித்தவண்
வருவது நிசமே
படிய திர்ந்திட
நடந்தலைந் துலைந்துமெய் பதறக்
கடிதிற் றேடியே திரிவதெக்
காரண மென்றான்.
35
(இ-ள்)
அவர்கள் அவ்வாறு சொல்ல, அதைக் கேட்ட புகைறாவென்னும் பண்டிதனானவன் அழகு பொருந்திய வேதங்கள்
சொல்லியது முண்மை. மூன்று வேதங்களுக்கு மெட்டாத நெடியவனான ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இப்பூமியின் கண் உதயமாகி இவ்வழியாக வருவது முண்மை. ஆனால்
அவர்களை நீங்கள் பூமியானது அதிரும்படி நடந்து எவ்விடமுஞ் சுற்றி வருந்திச் சரீரமெல்லாம் நடுங்க
விரைவாகத் தேடித் திரிவது யாது காரணத்தினால்? அதைச் சொல்லுங்களென்று கேட்டான்.
574.
முதிய வேதிய னுரைத்தலும்
பகையென முளைத்துப்
புதிய தாய்நபி யெனவரி
லவனைவிண் புகுதச்
சதிசெய் வோமென
வந்தனஞ் சரதமென் றுரைத்தார்
மதியி லாதறை
யிருளினு மிருண்டபுன் மனத்தார்.
36
(இ-ள்)
முதிர்ந்த வயதையுடைய வேதியனான அந்தப் புகைறாவென்பவன் அவ்வாறு கேட்ட மாத்திரத்தில் இந்த
அவனியின் கண்ணுள்ளவர்கள் அறையா நிற்கும் அந்தகாரத்தைப் பார்க்கிலும் கறுத்த கீழ்மையான
மனத்தையுடைய அந்த எகூதிகள்
|