பக்கம் எண் :

சீறாப்புராணம்

231


முதற்பாகம்
 

நூதனமாய்ப் பகைமையென்று சொல்லும்படி ஒருவன் இப் பூலோகத்தின்கண் ணுதயமாகி நபியென்று வருவானேயானால் அவனை நாங்கள் விண்ணுலகடையும்படி சதிசெய்குவோமென்று வந்தோம். இது சத்தியமென்று புத்தியில்லாது சொன்னார்கள்.

 

575. நிறைம திக்கதி ரெனவொரு நபியையிந் நிலத்திற்

    குறைவி லாதவன் விதித்தனே னீவிர்நுங் குலத்துக்

    கிறைவர் கூடியு மிடர்செயுங் கொடுங்கொலை யிருளான்

    மறையு மோமறை யாதென வுரைத்தனன் மறையோன்.

37

     (இ-ள்) அதைக் கேட்ட வேதியனான அந்தப் புகைறா வென்பவன் அவ்வெகூதிகளைப் பார்த்து பூரணச் சந்திரனது பிரகாசத்தைப் போல ஒரு நபியைக் குற்றமற்றவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் இந்தப் பூமியின்கண் சிருஷ்டிப்பானேயானால் அந்நபியினது பிரகாசமானது நீங்களும் உங்களது கூட்டத்தின் தலைவர்களும் ஒருங்கு சேர்ந்தும் செய்யா நின்ற துன்பத்தையுடைய கொடுமை தங்கிய கொலையென்னும் அந்தகாரத்தினால் மறைபடுமோ? மறைபடாதென்று சொன்னான்.

 

576. சுடிகை மன்னவர் குலத்துறு தொன்மறை நபிக்குப்

    படியி டத்திடர் நினைத்திடி லிம்மையிற் பழியுங்

    குடிகு டித்தொறும் வழுவும லாற்கொடு நரக

    முடிவி லெய்துவ ரென்றன னீதிநூன் முறையால்.

38

     (இ-ள்) அன்றியும், மகுடமுடி தாங்கிய அரசர்களினது கோத்திரத்தில் பொருந்தா நிற்கும் பழைய வேதங்களையுடைய நபிமார்களுக்கு இந்தப் பூமியின்கண் எவர்களாயினுந் துன்பஞ் செய்ய நினைப்பார்களேயானால் அவர்கள் இவ்வுலகத்தில் பழியும் குடிகுடிதோறும் இழிவும் அடைவதல்லாமல் கடைசியில் கொடிதான நகரத்திற்கும் ஆளாய்ப் போய்ச்சேருவார்களென்று நீதியையுடைய சாஸ்திரங்களினது முறைமையினாலெடுத்துச் சொன்னான்.

 

577. வானவர் முன்னினும் பின்னினுஞ் சுற்றியெவ் வழிக்கு

    மீன மின்றியே திரிகுவ ரெண்ணிறந் தோர்க

    ளான தாலொரு தீங்கிலை நபிக்கென வறைந்தான்

    ஞான மூற்றிருந் தொழுகிட மொழிந்தசெந் நாவால்.

39

     (இ-ள்) அன்றியும், அறிவானது ஊற்றாக இருந்து பாய்ந்திடும்படி சொல்லிய சிவந்த நாவினால் அந்தப் புகைறாவென்னும் பண்டிதனானவன் நபிமார்களுக்கு முன்னிலும் பின்னிலும் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் கணக்கற்ற பேர்கள் எப்பாதைகளுக்கும் குற்றமில்லாது வளைந்து திரிவார்கள்