முதற்பாகம்
ஆதலினால் அவர்களுக்கு
யாதொரு தீமையுமில்லை யென்று சொன்னான்.
578.
வச்சி ரத்தினி லெழுதிய
வெழுத்தினை மாற்றப்
பச்சை மென்மல ரிதழ்கொடு
துடைத்திடும் படிபோற்
செச்சை முங்கிய
புயநபிக் குறுகொலை செயவே
யச்ச மின்றிநீர்
துணிந்ததென் றறைந்தன னறிவால்.
40
(இ-ள்) அன்றியும்,
வச்சிரத்தினால் தீட்டிய அட்சரத்தைப் போக்குதற்குப் பச்சை நிறத்தையுடைய மெல்லிய புஷ்பத்தினது
இதழைக் கொண்டு துடைத்திடுந் தன்மையைப் போலச் செஞ்சாந்துக் குழம்பானது முங்கப் பெற்ற தோள்களையுடைய
இந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்குப் பொருந்திய கொலை செய்யும்படி நீங்கள்
அச்சமில்லாது துணிந்த துணிவென்றுத் தனது புத்தியினாற் கூறினான்.
579.
வேத வேதிய னுரைத்தநன்
மொழியெலாம் விரைவிற்
காதினுட்புகுந் தெண்ணிய
கருத்தினைக் கலக்கப்
பாத கப்பய னியாம்நினைத்
தவையெனப் பயந்து
கோத றத்தெளிந் தார்நசா
றாக்கடங் குலத்தோர்.
41
(இ-ள்)
அறிவினையுடைய, வேதவேதியனான அந்தப் புகைறாவென்பவன் அவ்வாறு சொல்லிய நன்மை பொருந்திய
வார்த்தைகளனைத்தும் அந்த நசாறாக்களின் கூட்டத்தி லுள்ளோர்களான அவ்வெகூதிகளின் செவிகளினகம்
நுழைந்து அவர்கள் எண்ணிய எண்ணத்தைக் கலக்க, உடனே அவர்கள் ஒன்பது பேரும் நாம் கருதியவை பாவத்தைத்
தராநின்ற பயனென்று அஞ்சித் தங்கள் உள்ளத்தின் கண்ணுள்ள குற்றமானது அற்றுப் போகும்படி தெளிவையடைந்தார்கள்.
580.
பொருந்து மாதவன் செம்மலர்
பொருவுசே வடியில்
விரிந்த செங்கரங்
கூப்பியுண் மனவினை வெறுத்துத்
தகுந்த வப்பய னும்மொழி
யெனவெதிர் சாற்றித்
திருந்து நல்வழி
கொண்டன ரவரவர் திசைக்கே.
42
(இ-ள்)
அவ்வாறு தெளிவடைந்த அந்த எகூதிகள் பொருந்திய மகாதவத்தினையுடையவனான அந்தப் புகைறாவென்பவனின்
செந்தாமரை மலர்ப் போன்ற செவ்விய பாதங்களில் விரிவுற்ற தங்களது செம்மையான கைகளைக் குவித்து
மனசினுள் இருந்த துற்செயல்களனைத்தையுந் தள்ளித் தராநிற்கும் தவத்தினது பலனானது உங்களது வார்த்தையென்று
பதிலுரைத்து அவரவர் திசைகளுக்குள்ள நல்ல திருந்திய பாதையின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
|