பக்கம் எண் :

சீறாப்புராணம்

237


முதற்பாகம்
 

593. நன்று நன்றென இபுனுசுத் ஆனுநந் நபியுந்

    துன்று வெம்படைத் தலைவரும் படியுடன் சூழக்

    குன்று லாவுகோ ளரிக்குலக் குறைஷிக ணடந்து

    சென்று தாக்கினர் கைசெனும் படைதெறித் ததுவே.

55

     (இ-ள்) அவ்வாறு சொன்ன வார்த்தைக்கு யாவர்களும் நல்லது நல்லதென்று சொல்ல இபுனுசுத் ஆனென்பவரும் நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் நெருங்கிய கொடிய படைத்தலைவர்களும் தங்களை குதிரைகளுடன் மலைகளில் உலாவித் திரியா நிற்கும் வலிமை தங்கிய சிங்கக் கூட்டத்தைப் போன்ற குறைஷிகள் சூழ்ந்து வரும்படி நடந்து சென்று அங்கு எதிர்த்து வந்திருந்த கைசென்று சொல்லும் அந்தச் சேனையை முன்னின்று தாக்கினார்கள். உடனே அவர்கள் யாவர்களும் இவர்களுக்கு முன் எதிர்த்து யுத்தஞ் செய்யச் சத்தியற்றவர்களாய்த் தெறித்துப் பின் வாங்கினார்கள்.

 

594. தருவெ னத்தரு முசைநயி னார்தரு மதலை

    திருவு லாவிய புயனபுல் காசிஞ்செங் கரத்தாற்

    பொருள்வ ரப்பெறு மவர்கலி யுடைந்தது போல

    வெருவி யோடின கைசெனும் படைமிடை மிடைந்தே.

56

     (இ-ள்) கற்பகத் தருவைப் போலும் அருளா நிற்கும் உசைன்நயினாரென்பவர் தந்த புதல்வராகிய திருவானது உலாவாநின்ற தோள்களையுடைய இந்நூற்குக் கொடை நாயகரான அபுல்காசீ மரைக்காயரவர்களின் சிவந்த கைகளினால் திரவியம் வரப்பெறுமவர்களின் வலுமையானது தகர்ந்து ஓடுவதைப்போல அந்தக் கைசெனும் சேனையானது குறைஷிகளுக்கு ஆற்றாது மிகமிடைந்து அஞ்சித் தகர்ந்து ஓடியது.

 

595. மாறு கொண்டகை செனும்படை தெறித்திட வயவர்

    பேறு கொண்டனம் வெற்றியுங் கொண்டனம் பெரியோன்

    வீறு கொண்டநன் முகம்மதின் பொருட்டென வியத்தி

    யாறு கொண்டன ரூரடைந் தனரனை வருமே.

57

     (இ-ள்) விரோதத்தைக் கொண்ட அந்தக் கைசெனுஞ் சேனையானது அவ்வாறு தெறித்து ஓடவே, அம்மக்கமா நகரத்திலுள்ள வீரர்களியாவர்களும் நாம் இன்று பேற்றைப் பெற்றோம். அன்றியும், ஜெயத்தையும் பெற்றோம். இதெல்லாம் நாம் பெற்றதற்குக் காரணம் பெரியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் பெருமையையடைந்த நன்மை பொருந்திய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்