பக்கம் எண் :

சீறாப்புராணம்

238


முதற்பாகம்

பொருட்டினா லென்று சொல்லி அவர்களைப் புகழ்ந்துப் பாதையையடைந்து மக்கமா நகரத்தைச் சேர்ந்துத் தங்கள் தங்கள் வீடுகளிற் போய்ப் புகுந்தார்கள்.

 

596. பண்டு நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குமப் படையைக்

    கண்டு நாமுறிந் தனமலால் வெற்றிகண் டறியோம்

    வண்டு வாழ்மலர்த் தொடைப்புய முகம்மது வரலாற்

    கொண்ட வெற்றிபோல் வெற்றிவே றிலையெனக் குறித்தார்.

58

      (இ-ள்) அன்றியும், அந்நாள் தொடுத்து இந்நாள் வரைக்கும் அந்தக் கைசென்னுஞ் சேனையை நாம் பார்த்துத் தோற்றுப் போனோமேயொழிய ஒரு தடவையாவது செயத்தைக் கண்டறிய மாட்டோம். ஆனால் இப்போது தேனீக்கள் வாசஞ் செய்யா நிற்கும் புஷ்பமாலையை யணிந்த புயங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வந்ததினால் நாம் அடைந்த ஜெயத்தைப் போல வேறேயொரு ஜெயமு மில்லையென்று மனசின்கண் குறிப்பிட்டார்கள்.