பக்கம் எண் :

சீறாப்புராணம்

240


முதற்பாகம்
 

      (இ-ள்) இப் பூலோகத்தின்கண் அமைந்து நிற்பதற் கிடமற்றுப் போகும்படிப் பெருகிய அளவில்லாத வானவர்கள் பல தடவையும் பெரிதாகக் கூடி மேகக் குடை பொருந்திய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் வரிசை தங்கிய சரண காவலடைந்திருப்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவ்வித மிருக்குங் காலத்தில் அந்நபிகள் பெருமானவர்களின் கைக்கு மற்றும் அவ்வூரிலுள்ள ஜனங்களின் கைவசம் இருக்கின்ற திரவியத்தைப் போல பொருந்திய திரவியம் இல்லாததினால் அவ்வெண்ணமானது சிந்தையின்கண் தோற்றமாயிற்று.

 

600. அகலிடத் தடங்கா வெற்றி யப்துல்முத் தலிபு பெற்ற

    புகழபித் தாலி பென்னும் புரவலர் தம்மை நோக்கித்

    துகளணு வணுகா மேனி சொரிகதி ரெறிப்பத் திண்மை

    முகமதி னழகு பூத்த வாய்திறந் துரைக்க லுற்றார்.

4

     (இ-ள்) அவ்விதம் தோற்றமாகவே தூசியானது அணுப்போலும் அணுகாத திருமேனியிலிருந்து சிந்துகின்ற கிரணமானது நான்கு பக்கங்களிலும் பிரகாசத்தைச் செய்ய வலிமை தங்கிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இந்தப் பூமியின்கண் அமையாத ஜெகத்தினைக் கொண்ட அப்துல் முத்தலிபவர்கள் பெற்ற கீர்த்தியையுடைய அபீத்தாலிபென்று சொல்லும் அரசரவர்களின் முகத்தைப் பார்த்துத் தங்களினது அழகு பூத்த வாயினைத் திறந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

601. குடித்தனப் பெருமை சேர்ந்த குலத்தினுக் குயர்ந்த மேன்மை

    படித்தலம் புகழுஞ் செங்கோற் பார்த்திவ ராத றேய்ந்து

    மிடித்தவர் பெரிய ராதன் மிகுபுகழ் கிடைத்தல் கையிற்

    பிடித்திடும் பொருள தன்றிப் பிறிதிலை யுலகத் தன்றே.

5

      (இ-ள்) இந்தப் பூமியின்கண் இல்வாழ்க்கைக்குப் பெருமையும் தம்மைப் பொருந்திய கோத்திரத்திற்கு உயர்வான மேன்மையும், இப்பூலோக முழுவதும் துதிக்கா நிற்கும் செங்கோலையுடைய மன்னராதலும், மெலிவையடைந்து தரித்திரத்தை யனுபவித்தவர்கள் பெரியவர்களாதலும், மிகுதியான கீர்த்தி உண்டாதலும், கையிற்பற்றிடும் பொருளினாலன்றி வேறில்லை.

 

602. ஒருதனி பிறந்து கையி னுறுபொரு ளின்றி யிந்தப்

    பெருநிலத் திருந்து வாழ்தல் பேதமை யதனால் வண்மைத்

    திருநகர் சாமிற் சென்று செய்தொழின் முடித்து வல்லே

    வருகுவன் சிறியே னுந்த மனத்தரு ளறியே னென்றார்.

6