பக்கம் எண் :

சீறாப்புராணம்

243


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அப்பெண்ணிற்குப் பசிய சமுத்திரத்தை யாடையாக உடுத்தப் பெற்ற இப்பூமியினிடத்திலும் பல விரத்தின வர்க்கங்களையுடைய மலைகளிடத்திலும் தீவுகளிடத்திலும் சிவந்த பிரகாசத்தைக் கொண்ட பொன்னுலகத்தினிடத்திலும் உள்ள செழிய இரத்தினங்களை யழுத்திய மனைகளுக்கு எக்காலமும் தங்கியிருக்கும் சுடர்களும் ஒப்பாக மாட்டாத ஒவ்வொரு அவயவங்களுக்கும் பிரத்தியேகம் பிரத்தியேகம் அழகானது பொருந்திய பதிமூன்று வயசு பிராயமுற்ற பெண்களை ஒப்பென்று வகைப்படுத்திச் சொல்ல நினைத்தாலும் நாவானது அவ்விதம் வகுத்துச் சொல்லாது.

 

609. குலமெனும் விருக்கந் தோன்றிக் குழூஉக்கிளைப் பணர்விட்டோங்கி

    நலனுறு செல்வ மென்னு நறுந்தழை யீன்று வண்ணச்

    சிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற்

    கலனனி நறவஞ் சிந்துங் கனியினுங் கனிந்த பாவை.

13

     (இ-ள்) அன்றியும், அப்பெண் கோத்திரமென்னு மரமானது உதையமாகிக் கிளைகளென்னுங் கூட்டமாகிய பணர்களை விட்டு வளர்ந்து நன்மை பொருந்திய செல்வமென்னும் நறிய தழைகளைப் பெற்று அழகிய விற்போன்ற நெற்றியையும் பவளம் போன்ற சிவந்த வாயினையுமுடைய யன்னையென்னும் செம்மையாகிய அழகிய பூவினது கலனான மிகுந்த நறவத்தைச் சிந்தாநிற்கும் கனிகளைப் பார்க்கிலும் கனிவுற்ற பாவையானவர்.

 

610. இனமெனுஞ் சோலை சூழ்ந்த விகுளைய ரெனும்வா விக்குட்

    புனையிழை யனைய ரான பொன்னிதழ்க் கமல நாப்பண்

    வனைதரு பதும ராக மணிமடி யிருந்த செவ்வி

    யனமென விளங்கித் தோன்று மணியணிப் பாவை யன்னார்.

14

     (இ-ள்) அன்றியும், அப்பெண் இனமென்னுஞ் சோலையானது சூழப் பெற்ற தோழிகளென்னுந் தடாகத்தினகம் ஆபரணங்களைத் தரித்த அன்னையரான அழகிய இதழ்களையுடைய தாமரை மலரின் மத்தியில் அலங்கரித்த பதுமராக மணியினது மடிமீது தங்கியிருந்த அழகிய அன்னப்பட்சி போலும் பிரகாசித்துத் தோற்றா நிற்கும் இரத்தினாபரணங்களைத் தரித்த பாவை போன்றவர்.

 

611. குரிசிலென் றுயர்ந்த வெற்றிக் குவைவலிதன் பரிதிற் பெற்ற

    வரிவைதன் னழகு வெள்ளத் தமுதினை யிருக ணாரப்

    பருகுதற் கிமையா நாட்டம் படைத்திலோ மெனநா டோறுந்

    தெரிவைய ருள்ளத் தெண்ணந் தேற்றினுந் தேறா தன்றே.

15