பக்கம் எண் :

சீறாப்புராணம்

244


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், பெண்களானவர் பெருமையாற் சிறப்புத்தங்கிய நாயகனென்றுயர்ந்த வெற்றியையுடைய குவைலி தென்பவன் அன்போடும் அரிதாகவீன்ற மகவினது அழகென்னுஞ் சமுத்திராமுகத்தை நமது இரண்டு கண்களாலும் நிறையும்படி குடிப்பதற்கு இமையாத கண்களை சம்பாதித்தோ மில்லையேயென்று தங்களது மனசின் கண்ணுள்ள விசாரத்தை நாள்தோறுந் தேற்றியும் தேறுதலடையாது.

 

612. வானகத் தமர ராலு மானில மக்க ளாலுந்

    தானவ யவத்தின் செவ்வி தனையெடுத் தின்ன தின்ன

    தானநன் குவமை யென்ன வளவறுத் துரைக்க வொண்ணாத்

    தேன்மொழி கதிசா வென்னுந் திருப்பெயர் தரித்த பாவை.

16

     (இ-ள்) அன்றியும், அப்பெண் ஆகாயலோகத்தின் கண்ணுள்ள தேவர்களினாலும் பெருமை தங்கிய இந்தப் பூமியின் கண்ணுள்ள மானிடர்களாலும் தேகவுறுப்புகளின் அழகையெடுத்து இன்னது அதற்கு நல்லதான உவமை யின்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாத தேன்போலும் வார்த்தைகளையுடைய கதீஜாவென்று சொல்லும் அழகிய நாமத்தைப் பூண்ட பாவையானவர்.

 

613. வருகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட் கெல்லாம்

    பொருளெனு மாரி சிந்திப் பூவிடத் தினிது நோக்கி

    யருமறை மலருட் காய்த்த வறிவெனுங் கனியை யுண்ட

    திருநமர் குலச்சஞ் சீவிச் செழுங்கொழுந் தனைய பூவை.

17

     (இ-ள்) அன்றியும், அப்பெண் இப்பூமியின் கண்வராநின்ற தாரித்திரிய மென்னும் வெயிலினால் வாடாநிற்கும் மானுஷிகராகிய பயிர்களெல்லாவற்றிற்கும் பொன்னென்னும் மழையைப் பொழிந்து அரிய வேதங்க ளென்னும் புஷ்பத்தை இனிதோடும் ஆராய்ச்சி செய்து அதினகம் காய்க்கப் பெற்ற அறிவென்னும் பழத்தை யருந்திய இலக்குமி யானவர், நம்மவர்களின் கூட்டத்திற்குச் சஞ்சீவியானவர், செழுமைதங்கிய மருக்கொழுந்தைப் போன்ற கிளியானவர்.

 

614. வணக்கமு மறிவுஞ் சேர்ந்த மனத்துறும் பொறையு நல்லோ

    ரிணக்கமும் வறியோர்க் கீயு மிரக்கமு நிறைந்த கற்புங்

    குணக்கலை வல்லோ ராலுங் குறித்தெடுத் தவட்கொப் பாகப்

    பணக்கடுப் பாந்தட் பாரிற் பகருதற் கரிய வன்றே.

18

     (இ-ள்) அன்றியும், தெய்வ வழிபாட்டிலும் பொருந்திய அறிவிலும் மனசின்கண் தங்கிப் பொறுமையிலும் நல்ல மனிதர்களின் சினேகத்திலும் யாதுமற்ற எளியவர்கட்குக் கொடுக்கும் தயவிலும் பூரணமான கற்பிலும் அந்தக்