பக்கம் எண் :

சீறாப்புராணம்

362


New Page 2

முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் நல்ல நயத்தையுடைய வார்த்தைகளாகப் பேசிக் கொண்டு அவ்விடத்தில் இருக்கின்ற தருணத்தில், வன்மையான மனத்தையுடைய கொடுமை தங்கிய காபிர்களாகிய அந்தச் சூதர்களி லொருவன் தனது மனசின்கண்ணே இரகசியமாகப் பொருந்திய தந்திரமாய் மின்னினது பிரகாசத்தையும் சுரக்கும்படி செய்யும் அந்த வீட்டினது மேன்மாடத்தின்கண் சேர்ந்த கல்லினிடமாய் சொல்லுங்களென்றுத் தனது கடைக்கண்ணாவது பொருந்தும்படி சைகையாகச் சொன்னான். அதையறிந்த ஒரு மனிதன் அவ்வண்ணமே அங்கு போய்ச் சேர்ந்தான்.

 

941. தீங்குறு மனத்த னேகிச் செறித்தமேற் பலகை மெல்ல

    வாங்கியங் கிருந்த கல்லை வரைப்புயம் பிதுங்க வுன்னித்

    தாங்கலி லுருட்டி மெல்லத் தள்ளினன் றள்ள லோடு

    நீங்கருங் கரத்தைக் கவ்வி நெரிபட விறுக்கிற் றன்றே.

41

     (இ-ள்) அவ்வாறு தீமை மிகுந்த மனத்தையுடையவனான அந்தச் சூதன்போய் ஆங்கு சேர்த்து வைத்திருந்த மரப்பலகையைத் தனது கையினால் மெதுவாக வாங்கிவிட்டு அவ்விடத்திலிருந்த கல்லை மலை போலும் இருபுயங்களும் பிதுங்கும்படி விசனத்துடன் எழும்பி யுருட்டி மெல்ல நபிகணாயகமவர்களின் தலையைக் குறிப்பிட்டுக் கீழே தள்ளினான். அங்ஙனம் தள்ளியதோடு அக்கல்லானது நீங்குதற்கரிய அவனது கையை கவ்விப் பிடித்து நசுங்கும் வண்ணம் இறுக்கிற்று.

 

942. கரத்தினிற் பதிந்த கல்லைக் கழற்றினன் கழற்ற லாகா

    துரத்தொடுங் காலை யூன்றி யுதைத்திழுத் தசைத்து வெள்வாய்

    நிரைத்தபல் லதரங் கவ்வி நெற்றிமேற் புருவ மோட்டி

    வரைத்தடப் புயங்கள் வேர்ப்ப வலித்தறச் சலித்து ழன்றான்.

42

      (இ-ள்) அவ்வாறு அந்தக் காபிராகிய சூதன் கையில் அழுந்திய அந்தக் கல்லை கையை விட்டுக் கழற்றினான். கழற்ற முடியாமல் வலிமையுடன் தனது கால்களை ஊன்றித் தாக்கி அசைத்து வலித்து வாயின்கண் வரிசையாகிய வெண்ணிறத்தையுடைய பற்களினால் இதழ்களைக் கடித்து கண்ணினது புருவங்களை நெற்றியின் மீது ஓட்டி மலைபோலும் விசாலமாகிய இருபுயங்களும் வேர்க்கும் வண்ணம் இழுத்து மிகவும் சலிப்புற்றுச் சுழற்சியடைந்தான்.

 

943. உரம்புவன் கையைக் கல்லோ டுதறுவ னுதற டாம

    னிரம்பநெட் டுயிர்ப்புச் செய்வ னிலைதளர்ந் திடுவன் வாசிக்

    குரம்படை துகள்போ லாவி குலைகுலைந் திடுவ னிந்தத்

    தரம்பட விதியோ வென்னத் தயங்குவன் மயங்கு வானே.

43