New Page 3
முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், அவன் தனது வாயினாலதட்டுவான். கையினை அந்த கல்லினுடன் சிதற அசைத்து
வீசுவான். அவ்விதம் அசைத்து வீச முடியாமல் பெருகும்படி நெடுமூச்சு விடுவான். தனது நிலைமையானது
சோர்வடைவான். குதிரையினது குளம்புகளினால் உண்டாகா நிற்கும் தூசிகளைப் போலத் தன் ஜீவனானது
மிகவும் நடுக்கமடைவான். இந்த முறைமையானது படும்படி நமக்கு ஆதிகாலத்திலமைத்த விதிப்பயனோ?
என்று சொல்லித் திகைப்பான். புத்தியானது கலக்கமுறுவான்.
944.
மாதிரங் கையைப் பற்றி வரவர
நெருக்க மேன்மேல்
வேதனை பெருக வாடி வேர்த்துட
லயர்ந்து சோர்ந்து
பாதகம் பலித்த வாற்றாற்
பதைபதைத் துருகி யேங்கி
யேதினிச் செய்வோ மென்ன
விடைந்துநெஞ் சுடைந்து நின்றான்.
44
(இ-ள்) அவ்விதம் கலக்கமுற்ற
அவன் அந்தக் கல்லானது தனது கையைப் பிடித்து மேலும் மேலும் நெருக்கவே; வரவரத் துன்பம் அதிகரிக்கும்படி
வாட்டமுற்றுச் சரீரம் வியர்க்கப் பெற்று வருந்திச் சோர்வடைந்துத் தான் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களுக்குச் செய்யத் துணிந்த துரோகமானது தனக்கே வந்து வாய்த்த முறைமையினால்
மிகவும் துடித்து உருகி ஏக்கங் கொண்டு இனி நாம் யாது செய்வோம்? செய்யுமுபாயமொன்று மில்லையேயென்று
சொல்லி வசக்கேடாகி மனமானது தளர்வுற்று நின்றான்.
945.
இனையன துன்ப மெய்தி யிவனிவ
ணிருப்ப வன்னோர்
மனையிடை பொருள்கொண் டீங்கு
வந்திலன் காணு மென்னச்
சினமுடன் சொல்வார் போலச்
செப்பிமே னிலையிற் போந்தார்
புனைமணிக் கரங்கல் லோடும்
புரண்டவன் கிடப்பக் கண்டார்.
45
(இ-ள்) இவன் இவ்வாறு
வருத்தத்தைப் பொருந்தி இங்கு இருக்க வீட்டின்கண் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுடனிருந்த
காபிர்களாகிய அந்தச் சூதர்கள் போனவன் பொருளெடுத்துக் கொண்டு இது பரியந்தம் இவ்விடத்திற்கு
வந்தானில்லன் ஆதலால் அவனைப் பாருங்களென்று கோபத்தோடும் சொல்லுவோர்களைப் போல
சொல்லி அவன் இருக்கப்பட்ட அந்த மேன்மாளிகையின்கண் போனார்கள். ஆங்கு போகவே அவன் அழகிய
தனது மணிக்கரங்களானவை கல்லுடன் புரண்டு கிடக்கும்படி பார்த்தார்கள்.
|