முதற்பாகம்
உடையவர்களான
வியாபாரிகளும் வலிமையைக் கொண்ட இடபங்களும் ஒட்டகங்களும் வெவ்விய குதிரைகளும் தங்களைச்
சூழ்ந்து இருமருங்கிலும் சொலியும் வண்ணம் அந்தக் கோட்டை மதிலினது பக்கத்திலிருக்கும் நகரங்களைத்
தாண்டி அழகிய சோலையின்கண் புகுந்து நடந்தார்கள்.
981.
குருகார்கழ
னிகள்வாவிகள் குளிர்சோலை கடந்தே
யிருகாதமு மொருகாதமு
மெழிலாக நடந்து
கருமாமுகி னிழறாவிய
கபிபாமுகம் மதுவும்
வருபாதையி
னடுவேயொரு வளமாமனை கண்டார்.
15
(இ-ள்) அவ்விதம் நடந்த பெருமை தங்கிய
கரிய மேகங்களின் நிழலானது பரவிய ஹபீபாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும்
மற்ற வியாபாரிகளும் அன்னப்பட்சிகள் மிகுத்த வயல்களையும் குளங்களையும் குளிர்ச்சியுற்ற சோலைகளையும்
தாண்டி அழகாய் மூன்றுகாத வழி தூரம் நடந்து வருகின்ற வழியின்கண் ஒப்பற்ற செல்வத்தையுடைய ஒரு
பெரிய மாளிகையைக் கண்டார்கள்.
982.
கனமாமதி யுடையோனெதிர்
களைகால முணர்ந்தோன்
மனமூடுறை யறிவான்முகம்
மதுவார்வழி யறிவோன்
குனிவார்சிலை
நசுறானிகள் குருவாகிய வூசா
வெனுமாமறை முதியோனுறை
யெழின்மாமனை யேகார்.
16
(இ-ள்) அவ்விதம் கண்ட அவர்களியாவர்களும்
பெருமை பொருந்திய மிகுத்த அறிவை யுடையவனும், வருங்காலம் நிகழ்காலம் இறந்த காலமென்னும்
முக்காலங்களையு மறிந்தவனும், மனத்தின் கண்ணே தங்கிய புத்தியினால் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் வருகின்ற நேர்மையான பாதையை யுணரக்கூடியவனும், வளைவைக் கொண்ட வில்லைத்
தாங்கிய நசறாக்களின் குருவுமாகிய ஊசாவென்று சொல்லும் அபிதானத்தையுடைய மகத்தாகிய வேதபண்டிதனான
அம்முதியவன் தங்கா நிற்கும் அழகிய பெரிய அந்த மாளிகையின் பக்கத்தில் போனார்கள்.
983.
மேகக்குடை நிழலுங்கதிர்
விரிவாகிய மெய்யும்
பாகத்திடை கமழும்பரி
மளமுமதி முகமு
நாகத்தொடு தனிபேசிய
நயினார்முகம் மதுவென்
றாகத்திடை கண்டானவ
ணடைந்தானரு கிருந்தான்.
17
(இ-ள்) அப்போது அந்த ஊசாவென்னு முதியவன்
மேகக் குடையினது நிழலையும் பிரகாசம் விரியப் பெற்ற திருமேனியையும் பக்கத்தின்கண் பரிமளியா
நிற்கும் கஸ்தூரி
|