முதற்பாகம்
வாசனையையும் சந்திரனைப்
போன்ற முகத்தையும் பார்த்து இவர்கள் சர்ப்பத்தினுடன் ஒப்பறப்பேசிய நயினாரான நமது நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தாமென்று மனசினிடத்தில் நினைத்து அங்கு
போய்ச் சேர்ந்து அவர்களின் அருகிலுட்கார்ந் திருந்தான்.
984.
இருந்தான்முகம்
மதுதண்கதி ரெழின்மாமுக நோக்கித்
திருந்தாரட லரியேதரு
செழுமாமழை முகிலே
பெருந்தாரணி தனினும்பதி
குலம்பேரவை யனைத்தும்
வருந்தாதுரை
யீரென்றனன் மறையோதிய மதியோன்.
18
(இ-ள்) அவ்வித மிருந்தவனாகிய வேதங்களைக்
கற்றுத் தெளிந்த அறிவினையுடைய ஊசாவென்னும் அம்முதியவன் நபிகள்பிரான் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களின் குளிர்ந்த பிரகாசத்தையுடைய அழகிய பெருமை பொருந்திய முகத்தைப் பார்த்துச்
சத்துராதிகளென்னும் யானைகட்கு வலிமை தங்கிய ஆண் சிங்கமானவர்களே! செழுமையுற்ற பெரிய
மழையைப் பொழியா நிற்கும் மேகமானவர்களே! மாட்சிமையையுடைய இப்பூமியின்கண் தங்களது ஊர் குலம்
பெயராகிய அவைகளெல்லாவற்றையும் என்னோடு துன்பமுறாது சொல்லுங்களென்று கேட்டான்.
985.
அதுனான்கிளை யாசிம்குல மமரும்பதி மக்கம்
பிதிராநிலை
யபுத்தாலிபு பின்னோனபு துல்லா
சுதனாமுகம் மதுநானெனச்
சொன்னார்மறை வல்லோ
னிதமாகிய நபியாமென
விசைந்தான்மன மகிழ்ந்தான்.
19
(இ-ள்) அவ்விதம் அந்த ஊசாவென்னும் பண்டிதன்
கேட்கவே; நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவனைப் பார்த்து எனது கிளையாகிறது
அதுனான்கிளை குலம் ஹாஷிம்குலம் நாங்கள் தங்கியிருக்கும் ஊர் திருமக்கமாநகரம் எனக்குப் பிதிராகிய
நிலைமையினையுடைய அபீத்தாலி பென்பவரின் தம்பி அப்துல்லாவின் புதல்வனான நான் முகம்மது என்று
சொன்னார்கள். அதைக் கேட்ட வேதவல்லவனான அவ்வூசா இவர்கள் நன்மையுடைய நபியாகுமென்று
சொல்லி மனம் பொருந்தி மகிழ்ச்சியடைந்தான்.
986.
வடிவாரிடை யகலாதுறை
மைசறாதனை நோக்கி
கொடியார்கழ
லடலோய்நுமர் குலமேதென நவிலக்
கடுவார்விழிக்
கொடியாரிடை கதிசாவெனு மயிலா
ரடியாரினி லெளியேன்மிக
வுரியேனென வறைந்தான்.
20
|