முதற்பாகம்
கதீஜா கனவுகண்ட படலம்
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய
விருத்தம்
997.
முகைமுறுக் கவிழ்ந்து
முருகுகொப் பிளிக்கு
முளரியு முழுமணி
நீல
நகைவிரித் தனைய
குவளையுந் துகிரி
னறுமலர்
விரிந்தென விரிந்து
திகழ்தருஞ் சேதாம்
பலுங்குடி யிருந்து
திருவளர்
வாவியின் வாளை
யுகடொறும் வெருவி
யொதுங்கிய சிறைப்புள்
ளொலித்திடு
மிடங்களுங் கடந்தார்.
1
(இ-ள்) செய்யிதுல் ஹறமைன் ஷபீவுல் முதுனபீன்
நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் மற்றும் வியாபாரிகளான மக்கமாநகரத்தை
யுடையவர்களும் அந்த வூசாவென்னும் பண்டிதன் தங்கியிருக்கும் எல்லையைவிட்டுங் கடந்து
மலரரும்புகள் தங்களிதழ்களின் முறுக்கைவிட்டு மவிழப்பெற்றுத் தேனைக் கக்கா நிற்கும் தாமரைகளும்
முழுமையாகிய நீலவிரத்தினமானது தனது பிரகாசத்தை நானாபக்கங்களிலும் பரவச் செய்ததைப் போன்ற
நீலோற்பலங்களும் பவளக் கொடிகளின் நறியமலர் விரியப் பெற்றதைப் போலும் விரிந்து எவ்விடங்களிலும்
ஒளிரா நிற்கும் செவ்விய ஆம்பல்களும் மாறாது குடியாக இருந்து அழகோங்கப் பெற்ற தடாகங்களிலுள்ள
வாளை மீன்கள் அத்தடாகத்தை விட்டும் குதிக்குந்தோறும் அச்சமுற்று ஒதுங்கிய சிறகினையுடைய பட்சிசாலங்கள்
ஒலிக்குகின்ற இடங்களையுந் தாண்டினார்கள்.
998.
புனன்முகி லசனி
யதிர்தொறுங் கிடந்து
புடைத்துவால் விசைத்தரி யேறு
சினமுடன் சிலம்பப்
புகர்முகச் சிறுகட்
சிந்துரம்
பிடியொடு மிரிந்து
நனைமல ருதறுங் காவகத்
தொதுங்கு
நனிதிரள்
குயினென மயில்க
ளினமணிச் சிறைவிட்
டருநடம் புரியு
மிருவரை யிடங்களுங்
கடந்தார்.
2
|