முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல முதலிய மற்றும் வியாபாரிகள் நீரைக்
கொண்ட மேகங்களி னிடியானது இடிக்குந்தோறும் ஆண்சிங்கங்கள் நமது சத்துராதிகள் சத்திக்கிறார்களென்றெண்ணிப்
பூமியின் மீது படுத்து வாலைத் தரையிலடித்து வேகமுற்று கோபத்துடன் குமுறவும், அதைக் கேட்ட
புள்ளிகள் படர்ந்த முகத்தின்கண் சிறிய கண்களையுடைய யானைகள் தங்களது பிடியானைகளோடும் ஓடித்
தேனையுடைய புஷ்பங்களைச் சிதற அசையா நிற்கும் சோலையினக மொதுங்குகின்ற மிகுத்த கூட்டங்களை
மயில்கள் மேகங்களென்று நினைத்துத் தங்களது கூட்டமாகிய அழகிய சிறகுகளைவிட்டு அரிய நாட்டியமாடும்
பெரிய மலைகளையுடைய இடங்களையுந் தாண்டினார்கள்.
999.
படுகொலைப் பார்வை காருடற் கழற்காற்
பறிதலைப் பங்கிவேட் டுவர்தங்
கொடுமரங் குனித்துத் தூணியுந்
தாங்கிக்
கொழுஞ்சரம் வலக்கரந் தூண்டிப்
புடைபுடை பரந்த மானினம்
வீழ்த்திப்
பொருந்தவுண் டிருந்தசீ றூரும்
விடர்படர் கானற் பாலையுங்
கடந்தார்
விறல்பெறு மரபினின் வேந்தர்.
3
(இ-ள்) அன்றியும், வலிமை பெறாநிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல முதலிய அறபுதேசத்தின்
வேந்தர்களான அவ்வியாபாரிக ளனைவர்களும் கெட்ட கொலைகளைக் கொண்ட கண்களையும் கரிய சரீரத்தையும்
செருப்பணிந்த கால்களையும் பறிந்த மயிரினைப் பெற்ற தலையையுமுடைய வேட்டுவச்சாதிகள் தங்களது
விற்களைவளைத்து அம்புறாத் தூணியையும் முதுகினிற் றாங்கிக் கொண்டு செழிய பாணங்களை வலது கையினால்
செலுத்தி இடங்கள் தோறும் பரவிய மான்கூட்டங்களை விழும்படி செய்து வயிறானது பொருந்தும் வண்ணம்
புசித்துத் தங்கியிருந்த சிறிய ஊர்களையும் பிளவுகள் படர்ந்த கானலையுடைய பாலை நிலங்களையுந்
தாண்டினார்கள்.
1000.
தொண்டையங் கனிக டோன்றியிற்
சிறப்பத்
தோன்றிய தரியமா ணிக்கம்
விண்டலர் விரித்துக்
காய்த்தன போலும்
விளங்கிடக் குருந்தொடு காயா
|