முதற்பாகம்
வண்டுறை பிடவுங் கொன்றையுஞ்
செறிய
வளைதருங் குடியிடை பொதுவர்
வெண்டயி ருடைக்கு மொலிமறா
முல்லை
வேலியுங் கடந்தயல் போனார்.
4
(இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல முதலிய அவ்வியாபாரிகளியாவர்களும் அழகிய கொவ்வைக்கனிகள் மருதோன்றிச் செடியின்
மீது சிறக்கும்படி விளங்கியது, அரியமாணிக்க மணிகள் குருத்துவிட்டு மலர்கள் விரியப்பெற்றுக்
காய்த்ததைப் போலும் பிரகாசிக்கக் காட்டெலுமிச்ச மரங்களுடன் காசாமரங்களும் தேனீக்கள் தங்கா
நின்ற பிடவஞ்செடிகளுங் கடுக்கை மரங்களும் மிகுதியாகச் சூழும் ஊரின்கண் இடைச்சியர்கள்
வெள்ளிய தயிர்க்கட்டிகளை மத்தினால் உடையா நிற்கும் ஓசையானது நீங்காத முல்லை நிலங்களையுடைய
ஊர்களையுந் தாண்டி அப்புறம் போனார்கள்.
1001.
பரித்திர ளனைத்து
மொருபுற நெருங்கப்
பாதையிற்
பல்லிய மெனவே
யெருத்தின மணிக
ளொலித்திட வொருபா
லிலங்கிள
வெயில்பிறந் துமிழக்
கரத்தினி நெடுவே
லேந்திய மாக்கள்
கவுண்மதக்
களிறென நடந்து
விரித்தவெண் குடையுந்
துவசமு மலிய
விரைந்தொரு
காவகம் புகுந்தார்.
5
(இ-ள்) அவ்வாறு போன பிரகாசியா நிற்கும்
இளங்கிரணங்கள் தோற்றமாய் எவ்விடங்களிலும் சொரியும் வண்ணம் கைகளில் நெடிய வேலாயுதம் தாங்கிய
நாயகம் நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல முதலிய மற்றும் வியாபாரிகள் அப்பாதையினிடத்தில்
குதிரைக் கூட்டங்களியாவும் ஒரு பக்கத்தில் நெருங்கி வரவும், ஒரு பக்கத்தில் வாத்திய ஒலியினைப்
போல இடபக் கூட்டங்களின் கழுத்திற் கட்டியிருக்கும் மணிகளொலிக்கவும், விரித்த வெள்ளிய குடைகளும்
கொடிகளும் அதிகரிக்கவும், கன்னத்தால் மதத்தைப் பொழிகின்ற யானைகளை நிகர்ப்ப நடந்து விரைவாக
ஒரு சோலையின்கண் போய் நுழைந்தார்கள்.
1002.
சந்தகில் திலகங்
குரவுதேக் காரந்
தான்றிகோங்
கேழிலைம் பாலைச்
சிந்துர மசோகு
மாதவி நெல்லி
செண்பகம்
பாடலந் தேமா
|