பக்கம் எண் :

சீறாப்புராணம்

386


முதற்பாகம்
 

     மந்தரை கமுகு புன்னைநா ரத்தை

        மகிழ்விளா மருதெலு மிச்சைக்

     குந்தமா சினிமா கடம்பில விதழி

        குங்குமஞ் செறிதிரட் சோலை.

6

      (இ-ள்) அச்சோலையானது சந்தனம், அகில், மஞ்சாடி, குரா, தேக்கு, ஆத்தி, தான்றி, கோங்கு, எழிலைம்பாலை, சிந்துரம், அசோகு, குருக்கத்தி, நெல்லி, சண்பகம், பாதிரி, தேமா, மந்தாரை, கமுகு, புன்னை, நாரத்தை, மகிழ், விழாத்தி, மருது, எலுமிச்சை, குருந்தம், ஆசினி, சூதம், கடம்பு, இலவம், கொன்றை, குங்குமமாகிய இம்மரங்கள் நெருங்கிக் கூட்டமாய் நில்லா நிற்கும் சோலை.

 

1003. நித்திலத் திரளி ளரும்பிளம் புன்னை

        நிறைமலர் சொரிவன வொருபால்

     கொத்தரும் பலர்த்திச் சண்பகத் தொகுதி

         குவைதரச் சொரிவன வொருபால்

     பத்தியிற் செறிந்த பாடலம் விரித்த

         பாயலிற் சொரிவன வொருபால்

     புத்தரி சொளுக்கு நிறைமகிழ் செறிந்த

         புழைமலர் சொரிவன வொருபால்.

7

     (இ-ள்) அன்றியும், அங்கு அரும்பினையுடைய புன்னை மரங்கள் முத்துக் கூட்டங்களைப் போல வரிசையாகிய புஷ்பங்களைச் சிந்துகிறவை ஒருபக்கம், சண்பகக் கூட்டங்கள் குவிதலாகக் கொத்தாகிய மொட்டுகளை விரியும்படி செய்து சிந்துகிறவை ஒரு பக்கம், பத்தியாக நெருங்கிய பாதிரிமரங்கள் பூமியின்கண் விரித்த பாயலைப் போலப் புஷ்பங்களைச் சிந்துகிறவை ஒருபக்கம், புதிய அரிசொளுக்கா நிற்கும் ஒழுங்கினைக் கொண்ட மகிழ மரங்கள் நெருங்கிய துவாரங்களை யுடைய புஷ்பங்களைச் சிந்துகிறவை ஒரு பக்கம்.

 

1004. முள்ளிலை பொதிந்த வெண்மடல் விரிந்து

        முருகுமிழ் கைதைக ளொருபால்

     கொள்ளைமென் கனிகள் சிதறுமுள் ளீந்து

         குறுங்கழுத் தசைவன வொருபால்

     வெள்ளிவெண் கவரி விரிந்தபோற் பாளை

         மிடறொசி வனகமு கொருபாற்

     றெள்ளுநீர்க் குரும்பைக் குலம்பல சுமந்த

         செறிதிரட் டாழைக ளொருபால்.

8

     (இ-ள்) அன்றியும், முட்களையுடைய இலைகளினாற் பொழியப்பெற்ற வெள்ளிய மடல்கள் மலர்ந்து வாசனை வீசா