|
முதற்பாகம்
ஒரு பக்கம், வாழைமரங்கள்
பொன்னானது கனிந்து பிரகாசிப்பதைப் போன்ற தங்களது பூங்குலையின் கண்ணுள்ள வளைவையுடைய கனிகளைச்
சிந்துகிறவைகள் ஒரு பக்கம், மாதுளைக் கூட்டங்கள் குற்றமற்ற பொற்கலசங்கள் விரிந்து செந்நிறத்தையுடைய
இரத்தினங்களைச் சிந்துவனபோலும் தங்களது கனிகள் வெடித்து சிவந்த விரைகளைச் சிந்துகிறவைகள்
ஒரு பக்கம்.
1007.
உலகமுந் திசையும்
புகழுசை னயினா
ருதவுசந் ததியபுல்
காசீஞ்
சலதர மனைய கரத்தினி
லேற்றோர்
தம்மனங்
குளிர்வபோற் குளிர்ந்து
நிலமிசை கிடையாப்
பெருவளஞ் சுரந்து
நீடிரை
வாவிக டிகழ
வலகிலாச் செல்வங்
குறைவறா திருந்த
வணிதிகழ்
வனதளிர்ச் சோலை.
11
(இ-ள்) அவ்வாறாக இவ்வுலகமும் எண்டிசைகளும்
புகழா நிற்கும் ஹூசைன் நயினாரவர்கள் தந்த சந்ததியாகிய இந்நூலின் உதார நாயகர் அபுல்காசீம்
மரைக்காய ரவர்களினது மேகத்தைப் போன்ற கைகளினால் பொருள்வரப் பெற்றோர்களின் மனமானது
குளிர்ச்சியடைவது போலப் பிரகாசிக்கப்பட்ட மிகுந்த கிளைகளையுடைய அந்தச் சோலையானது
குளிர்ச்சியடைந்து இப்பூமியின்கண் எவ்விடத்தும் அகப்படாத பெரிய வளங்களதிகரித்து நானாபக்கங்களிலும்
நீண்ட அலைகளையுடைய தடாகங்கள் விளங்கும் வண்ணம் கணக்கற்ற செல்வமானது குறையாது தங்கி இருந்தது.
1008.
அறிவினுக்
கறிவா யரசினுக் கரசா
யணியினுக்
கணியதாய்ச் சிறந்த
மறுவிமெய் கமழ்ந்த
முகம்மதுங் கூண்ட
மக்கிக
ளனைவருஞ் செறிந்து
நிறைவளம் பலகண்
டகங்களி கூர்ந்து
நிரைமணிப்
புரவிவிட் டிறங்கித்
துறையின்முத் திறைக்குந்
திரைத்தடஞ் சூழ்ந்த
சோலையி
லிருந்தன ரிப்பால்.
12
(இ-ள்) அவ்விதமிருந்த நீர்த்துறைகளில்
முத்துக்களை அள்ளிச் சொரியா நிற்கும் அலைகளையுடைய குளங்கள் நான்கெல்லைகளிலும் வளைந்த அந்தச்
சோலையின்கண் அறிவுக்கறிவாகியும் அரசுக் கரசாகியும் அழகுக்கழகாகியும் வரிசை தங்கிய சரீரத்தில்
கஸ்தூரி வாசனை கமழப்பெற்ற நமது நாயகம்
|