|
முதற்பாகம்
நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் அவர்களோடு கூடிய மக்கமாநகரத்தை யுடையவர்களான வியாபாரிகளெல்லாவரும்
நெருங்கி அங்கு பூரணப்பட்ட பலவிதச் செல்வங்களையும் பார்த்து மனமானது சந்தோஷ மிகுக்கப்பெற்று
ஒழுங்காக மணிகளைக் கோத்துக் கட்டிய தாங்களேறியிருக்கும் குதிரைகளை விட்டுக் கீழேயிறங்கி
அவ்விடத்திற்றானே தங்கியிருந்தார்கள் இதன் பின்னர்.
1009.
வானிழிந் தமர ரெண்ணிலக்
கிலபேர்
முகம்மதி
னிடத்தில்வந் துறைந்து
தேனிமிர் மரவத்
தொடையலுந் தரித்துத்
திகழ்மணிக்
கலன்பல வணிந்து
பானுவின் கதிர்கள்
பொருவுறா தியன்று
பன்மணித்
தவிசின்மே லிருத்திக்
கான்மலர் தூயொட்
டகத்தின்மே லேற்றிக்
கண்கொளா
தழகிருந் திலங்க.
13
(இ-ள்) கணக்கினாற் குறிப்பில்லாத
அளவற்ற தேவர்களான மலாயிக்கத்துமார்கள் ஆகாய லோகத்திலிருந்து இறங்கி நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் வந்து தங்கித் தேனீக்க ளொலிக்கப்பெற்ற குங்குமப்
புஷ்பத்தினாலான மலர்மாலையும் தரித்து பிரகாசியா நின்ற இரத்தின வர்க்கங்கள் அழுந்திய பலவித
ஆபரணங்களைப் பூட்டிச் சூரியனின் கிரணங்களும் ஒப்பாகாது பொருந்திய பலமணிகளைப் பதித்த ஓராசனத்தின்மேல்
லிருக்கச் செய்து வாசனை விரிந்த பரிசுத்தமாகிய ஒரு ஒட்டகையின் மீதேற்றிக் கண்கொள்ளாத
அழகான திருந்து ஒளிரவும்.
1010.
பல்லியங் கறங்கக்
கொடித்திர ணுடங்கப்
பானிறக்
கவரிகள் கழற்ற
வெல்லவன் கதிரிற்
படைக்கலஞ் செறிய
விந்துவெண்
குடைதனி நிழற்றச்
செல்லுறழ் கரட
மதகரி நெருங்கச்
சிவிகையின்
கணந்திசை மலிய
வல்லியின்
கொடிபோ லமரர்தம் மகளிர்
மருங்கிரு
பாலினு மிடைய.
14
(இ-ள்) நானாபக்கங்களிலும் வாத்தியங்கள்
முழங்கவும், கொடிகளினது கூட்டங்கள் அசையவும், வெண்ணிறத்தையுடைய சாமரங்கள் சுழற்றவும், சூரியனது
கிரணங்களைப் போல ஆயுதங்கள் பிரகாசித்து அதிகரிக்கவும், வெள்ளிய சந்திரவட்டக்குடை ஒப்பற்ற
நிழலைச் செய்யவும், மிகவும்
|