|
முதற்பாகம்
மதத்தைச் சொரியா
நிற்கும் மேகத்தைப் போன்ற யானைகள் நெருங்கவும்; பல்லக்கின் கூட்டங்கள் எண்டிசைகளிலும்
பெருகவும், வல்லிக்கொடி போலும் இடையினையுடைய தேவமகளிரான கூறுலீன்கள் இருபுறத்தினிடத்தும் செறியவும்.
1011.
பரித்திர டொடர
வானவ ரீண்டிப்
பரிமளப்
பொன்னலர் தூற்றத்
தெருத்தலை புகுந்து
பவனியி னுலவிச்
செழும்புகழ்
முகம்மது வரவுங்
கருத்துடன் கண்ணுங்
களிப்புற நோக்கிக்
கவின்மலர்ப்
பதம்பணிந் திறைஞ்சத்
திருத்திழை மணியிற்
குருத்தெனுங் கதீசா
தெரிதரக்
கனவுகண் டெழுந்தார்.
15
(இ-ள்) குதிரைக் கூட்டங்கள் பின்பற்றவும்,
தேவர்களான மலாயிக்கத்துமார்கள்கூடி வாசனையையுடைய அழகிய புஷ்பங்களைத் தூவவும், செழிய கீர்த்தியினையுடைய
நாயகம் நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வீதியின்கண் நுழைந்து பவனியாக
உலாவி வரவும், மனசினுடன் விழிகளும் சந்தோஷத்தைப் பொருந்தும்படி பார்த்து அவர்களின் அழகிய
தாமரைமலர் போன்ற இரு பாதங்களிலும் தாழ்ந்து வணங்கவும், செவ்வைப் படுத்திய ஆபரணங்களையுடைய
இரத்தினக் குருத்தென்று சொல்லா நிற்கும் கதீஜாநாயகமவர்கள் ஒரு சொப்பனத்தைத் தெரியும்படி
பார்த்துத் தாங்கள் சயனித்திருக்கும் சயனத்தை விட்டும் எழும்பினார்கள்.
1012.
கனவினை நனவென்
றகமகிழ்ந் தெழுந்து
கதிர்மணி
வாயிலை நோக்க
வினமத கரியும்
பரியொடி ரதமு
மிருங்கடற்
சேனையும் விருது
மனமல ருறைந்த முகம்மது
தமையும்
வானவர் மகளிர்க
டமையும்
புனைமணிக்
கொடியுங் கவிகையுங் காணார்
பொருந்திய
துயரமே கண்டார்.
16
(இ-ள்) அவ்வித மெழும்பிய கதீஜாநாயக
மவர்கள் தாங்கள் கண்ட சொப்பனத்தை நனவென் றெண்ணி மனச்சந்தோஷங் கொண்டுத் தாங்களிருந்த
இடத்தைவிட்டு மெழும்பிக் கிரணங்களை வீசா நிற்கும் இரத்தின வர்க்கங்கள் அழுத்திய வாயலில்
வந்து நின்று கொண்டுத் தெருவீதியைப் பார்க்கக் கூட்டமாகிய மதங்களைப் பொழியா நிற்கும்
யானைகளையும் குதிரைகளுடன் தேர்களையும் பெரிய சமுத்திரத்தைப் போன்ற
|