பக்கம் எண் :

சீறாப்புராணம்

391


முதற்பாகம்
 

சேனைகளையும் விருதுகளினையும் தங்களினது இருதயத் தாமரையின்கண் தங்கிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களையும் தேவமகளிர்களான அரம்பையர்களையும் அலங்கரிக்கப்பட்ட மணிகளையுடைய கொடிகளையும் சந்திரவட்டக் குடையையும் காணாத அவர்கள் பொருந்திய வருத்தத்தை யடைந்தார்கள்.

 

1013. இருடுணித் தெழுந்த மின்னெனப் பிறழு

        மிழைபல திருத்தல ரிருண்ட

     சுரிகுழன் முடியார் தோளணி தரியார்

        சுண்ணமுஞ் சாந்தமும் பூசார்

     சரிகரத் தணியார் மேகலை யிறுக்கார்

        தளிர்மலர்ப் பதத்தணி தாங்கார்

     மருமலர் சொருகார் வடுவெனச் சிறந்த

        வரிவிழிக் கஞ்சன மெழுதார்.

17

     (இ-ள்) அவ்வாறு துயரத்தை யடைந்த கதீஜாநாயகமவர்கள் அத் துயரத்தினால் அந்தகாரத்தை அறச்செய்து எழும்பிய மின்னைப் போலும் கிடந்து பிறழா நிற்கும் பலவித ஆபரணங்களைத் தங்களது சரீரத்தின்கண் செவ்வையாகும் வண்ணம் தரித்திலர்கள். கறுத்த முறுக்கினையுடைய கூந்தலைக் கொண்டையாக முடித்திலர்கள். தோளினது கலன்களை யணிந்திலர்கள். சுண்ணச் சாந்தையும் சந்தனத்தையும் மேனியின் மீது பூசிலர்கள். கையில் வளையல்களைப் பூண்டிலர்கள். மேகலாபரணத்தை இறுக்கிலர்கள். தளிர்களையுடைய தாமரைமலர்போலும் பாதங்களின் பணிகளைப் புனைந்திலர்கள். அளகபாரத்தின்கண் பரிமளத்தினையுடைய புஷ்பங்களைச் சொருகிலர்கள். மாம்பிஞ்சுபோலும் வரிகளையுடைய சிறப்புத் தங்கிய கண்களுக்கு மையெழுதிலார்கள். 

 

1014. கந்துகங் கழங்கம் மனைகரத் தேந்தார்

        கதிர்மணி யூசறொட் டாடார்

     சிந்துரப் பிறைநன் னுதலியர் திளைத்த

        சிற்றிலும் பேரிலுந் தேடார்

     மந்தர மதிண்மண் டபத்திடைப் புகுந்து

        மலர்க்குழற் கதிற்புகை மாட்டார்

     சுந்தரக் கமலச் சீறடிக் கிசைந்த

        சுடரலத் தகமெடுத் தெழுதார்.

18

     (இ-ள்) அன்றியும், கதீஜாநாயகமவர்கள் பந்துகழங்கு அம்மானையாகிய இவைகளைத் தங்களது கைகளால் தாங்கார்கள். பிரகாசத்தைதக் கொண்ட இரத்தின வர்க்கங்களையுடைய