பக்கம் எண் :

சீறாப்புராணம்

392


முதற்பாகம்
 

ஊஞ்சலைக் கையினால் தொட்டு ஆடார்கள். சிந்தூரப் பொட்டணிந்த இளஞ் சந்திரன் போலும் நல்ல நெற்றியினையுடைய பெண்கள் அதிகமாய்க் கட்டியிருக்கும் விளையாட்டிற்குரிய சிறிய வீடுகளையும் பெரிய வீடுகளையும் தேடார்கள். கோட்டை மதிலினையுடைய மாடத்தின்கண் நுழைந்து புஷ்பமாலையணிந்த கூந்தலுக்கு அகிற்கட்டையினது தூமத்தைச் சேர்க்கார்கள். அழகிய தாமரை மலர்போலும் சிறிய பாதங்களுக்குப் பொருந்திய பிரபையினையுடைய செம்பஞ்செடுத்துக் கோலமெழுதார்கள்.

 

1015. பஞ்சணைப் பொருந்தா ரிருவிழி துயிலார்

        பழத்தொடு பாலமு தருந்தார்

     கொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார்

        கொழுமடற் செவிக்கிசை கொள்ளார்

     கஞ்சமென் மலர்த்தாள் பெயர்ந்திட வுலவார்

        கடிமலர் வாசநீ ராடார்

     வஞ்சி நுண்ணிடையார் தம்மிடத் துறையார்

        முகம்மது மனத்திடத் துறைந்தார்.

19

     (இ-ள்) அன்றியும், தாங்கள் சயனியா நிற்கும் பஞ்சணையின் மேல் பொருந்த மாட்டார்கள். இரண்டு கண்களும் நித்திரை செய்ய மாட்டார்கள். கனிகளுடன் கலந்த பாலமுதத்தை யுண்ணமாட்டார்கள். கொஞ்சா நின்ற மெல்லிய குதலைச் சொற்களையுடைய கிளிகளோடும் பேச மாட்டார்கள். செழிய மடலினையுடைய காதுகளினால் இராகசங்கீதங்களைக் கொள்ள மாட்டார்கள். தாமரை மலர் போன்ற மெல்லிய இரு பாதங்களும் பெயர்ந்திடும்படி பூமியின் மீது உலாவ மாட்டார்கள். வாசனையைக் கொண்ட புஷ்பங்களையுடைய தடாகத்தின் கண்ணுள்ள பரிமளம் பொருந்திய நீரில் ஸ்நானஞ் செய்ய மாட்டார்கள். வஞ்சிக்கொடி போலும் நுண்ணிய இடையினை யுடைய தங்களது தோழிப் பெண்களுடன் தங்கியிருக்க மாட்டார்கள். நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மனத்தினிடத்தில் தங்கியிருந்தார்கள்.

 

கலிவிருத்தம்

 

1016. மருமலர்ப் புயமுகம் மதுபொன் மாமதிற்

     றிருநகர்த் தெருவரு பவனி சேர்தரு

     முருகலர் குழுலிதன் கனவின் முற்படக்

     கருதிய துயரெனுங் கடற்கு ளாயினார்.

20

     (இ-ள்) அவ்வாறு தங்கியிருந்த தேனைக் கொண்ட புஷ்பமாலையணிந்த கூந்தலையுடைய கதீஜா நாயகமவர்கள்