பக்கம் எண் :

சீறாப்புராணம்

394


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அக்கதீஜா நாயகமவர்கள் தங்களது மடியின் மீது பூரணச்சந்திரன் வராநிற்கும் வரவும்; மகத்தாகிய வேதபண்டிதனான உறக்கத்தென்பவன் அதைக்கேட்டு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கும் உமக்கும் நடந்தேறும் விவாகத்தைக் குறித்ததென்று கூறிய வார்த்தைகளும், அந்நபிகள் பெருமானின் சிறப்பையுடைய மணப்பவனியினது சொப்பனமும், மாமனான அவ்வுறக்கத்தின் உறுதியுற்ற வசனங்களும் பொய்யாய்க் கெட்டுப் போகுமா? போகாதென்று சொல்லுவார்கள்.

 

1020. கருத்தினுள் ளுறைமுதற் கனவை மைசறா

     விரித்தெடுத் துரைத்தலும் விளங்கத் தேர்ந்துபொன்

     வரைத்தடப் புயத்தனூ சாதன் வாக்கினா

     லுரைத்ததென் னோவென வுளத்தி லெண்ணுமால்.

24

     (இ-ள்) அன்றியும், நமது கருத்தினகம் தங்கா நிற்கும் ஆதியிற்கண்ட சொப்பனத்தை மைசறா வென்பவன் விரிவாக எடுத்துச் சொல்லவும் அதை விளங்கும்படி மனசின்கண் தெளிந்து மகாமேரு பருவதத்தைப் போலும் விசாலமாகிய பெரிய தோள்களை யுடையவனான ஊசாவென்பவன் தனது வார்த்தைகளினால் பதில் சொன்னது யாதோ? ஒன்றுந் தெரிந்திலேமென்று இருதயத்தின்கண் நினைப்பார்கள்.

 

1021. நிலமிசை நபிப்பெயர் நிறுத்தும் பேர்களுக்

     கலைவுறப் பெரும்பகை யவதி யுண்டெனக்

     கலைவல ருரைத்தசொற் கருத்தி லெண்ணமுற்

     றுலைதர வுடன்மெலிந் துருகி வாடுமால்.

25

     (இ-ள்) அன்றியும், இப்பூமியின்மீது நபியென்னு மோரபிதானத்தை நிலையாக நிற்கச் செய்யும் ஆள்களுக்குத் துன்பமுறும் வண்ணம் பெரிய பகைமையாகிய வருத்தமுண்டென்று சாஸ்திரவல்லவர்களான பண்டிதர்கள், சொல்லிய வார்த்தைகளைத் தங்களது சிந்தையில் நினைத்துச் சரீரம் நடுக்கமுறும்படி மெலிவடைந்து உருகி வாடுவார்கள்.

 

1022. உரிமையி லுடனெழுந் தொழுகு மைசறா

     வரைதரு பத்திரம் வரவுங் காண்கிலே

     மெரிசுரப் பாலையிற் செயதி யாவையுந்

     தெரிதர விலையெனத் திகைத்துத் தேம்புமால்.

26

     (இ-ள்) அன்றியும், நாம் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களோடு சொந்தமுடன் எழும்பிச் செல்லும் மைசறா வென்பவன் எழுதிய கடிதத்தை இது பரியந்தம் இங்கு