|
முதற்பாகம்
ஓராசனத்தின்மேல்
இருக்கும்படி செய்து இனிமையுடன் துதித்துத் தீப்பொறிகள் வரிசையாகிய அயினிநீரால் கண்பார்வையினால்
வந்த தோஷமானது தீரும்வண்ணம் சுத்தி செய்தார்கள்.
1039.
மறமுதிர்ந் திலங்கும்
வெள்வாண் முகம்மது மினிது புக்கார்
திறலபூ பக்க ரென்னுஞ்
செம்மலு மனையிற் சேர்ந்தார்
தொறுவினத் தொடுமப்
பாசு மாரிதுஞ் சுபைறு தாமு
மறபிக ளெவருந்
தத்த மணிமனை யிடத்திற் சார்ந்தார்.
6
(இ-ள்) அப்போது கொலையானது முற்றிப்
பிரகாசியா நிற்கும் வெள்ளிய வாளாயுதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களும் தங்களது வீட்டின்கண் இனிமையுடன் போய்ப் புகுந்தார்கள். வலிமையினையுடைய அபூபக்கரென்னும்
செம்மலானவர்களும் தங்களது மனையின்கண் போய்ச் சேர்ந்தார்கள். ஒட்டகக் கூட்டத்தோடும் அப்பாசும்
ஆரிதும் சுபைறும் மற்றும் வியாபாரிகளான அறபிக ளெல்லாவரும் தங்கள் தங்களின் அழகிய வீடுகளிற்
போய்ச் சேர்ந்தார்கள்.
1040.
கட்கொலை படிறு நிந்தை
களவுடன் கொடிய பாவ
முட்பட வளர்த்த
மெய்யா னுறுமொழி யறுதி யில்லா
னட்பினைப் பகைத்துச்
செய்த நன்றியைக் கொன்று நஞ்சார்
மட்படு கலமே யன்ன
மனத்தபூ சகுலும் போனான்.
7
(இ-ள்) அன்றியும், கட்குடி, கொலை பாதகம்,
பொய்மை, நிந்தை, களவோடு கொடிய பாவமாகிய இவைகளெல்லாம் மனசின்கண் பொருந்தும்படி வளரச்
செய்த சரீரத்தையுடையவனும், பொருந்திய வார்த்தைகளின் அறுதி யில்லாதவனுமாகிய சுற்றத்தாரை
விரோதித்துத் தனக்குப் பிறர் செய்த நன்மைகளைச் சங்கரிக்கு விடம் நிறைந்த மண்ணினாலுண்டான
பாண்டத்தை நிகர்த்த அபூஜகிலென்பவனும் தனது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தான்.
1041.
பாங்கினிற் கணக்கர்
சூழப் பரிசனக் குழுவந் தீண்ட
வாங்குவிற் றடக்கை
வெற்றி மலிபுகழ் மைச றாவு
மோங்குமா நகரம்
புக்கி யொளிர்மணித் தவிசி னாய
தேங்குழற் கதீசா
பைப்பொற் சீறடி வணக்கஞ் செய்தான்.
8
(இ-ள்) அன்றியும், வளையா நிற்கும் கோதண்டம்
தாங்கிய பெருமை பொருந்திய கையினையும் வெற்றியினையும் அதிகரிக்கா நின்ற கீர்த்தியினையுடைய
மைசறாவென்பவனும் தனது பக்கங்களில் கணக்கர்கள் வளையவும், ஏவல் செய்வோர்களின் கூட்டமானது
வந்து நெருங்கவும்; ஓங்குகின்ற செல்வத்தையுடைய அந்தத் திருமக்கமாநகரத்திற் புகுந்து
|