பக்கம் எண் :

சீறாப்புராணம்

402


முதற்பாகம்
 

பிரகாசிக்கின்ற இரத்தின வர்க்கங்க ளழுத்திய ஆசனத்தின் மீதான வாசனையமைந்த கூந்தலையுடையவர்களாகிய கதீஜாநாயக மவர்களினது பசிய பொன்னிறத்தைக் கொண்ட சிறிய பாதங்களில் வணங்கினான்.

 

1042. தெரிமலர்க் கரங்கள் கூப்பிச் சேவடி வணங்கி நின்ற

     வுரிமைதன் முகத்தை நோக்கி யொண்டொடி கதீசா வென்னு

     மரிவையாங் குற்ற செய்தி யறைகென வறைய மாரி

     மருமலி புயங்கள் விம்ம வாய்புதைத் திருந்து சொல்வான்.

9

     (இ-ள்) ஒள்ளிய வளையல்களையுடைய கதீஜாவென்று சொல்லும் அரிவை யானவர்கள் அவ்வாறு அறியத்தக்க தாமரை மலர் போன்ற இருகைகளையும் குவித்துத் தங்களின் சிவந்த பாதங்களில் வணக்கஞ் செய்து அவ்விடத்தில் தானே தங்கி நின்ற உரிமையாகிய அம்மைசறாவென்பவனின் முகத்தைப் பார்த்து நீங்கள் பிரயாணப் பட்டுப் போன அவ்விடத்தில் பொருந்திய செய்திகளைச் சொல்லென்று கூற; அதைக் கேட்ட அவன் தேனினது பரிமளமதிகரித்த இருதோள்களும் விம்மித முறும்படி தனது வாயைக் கைகளினாற் பொத்திக் கொண்டு அங்கு ஓரிடத்தில் தங்கியிருந்து சொல்லத் தொடங்கினான்.

 

1043. கரும்பெனத் தோன்றிச் செம்பொற் கதிருமிழ்ந் திருந்த கொம்பே

     சுரும்பிருந் திசைகொ டிண்டோட் டோன்றல் காரணங்க ளியாவுந்

     தரம்பெற விவைகொ லென்னத் தானள வறுத்து மட்டிட்

     டிரும்பெரும் புடவி தன்னு ளியாவரே யியம்ப வல்லார்.

10

     (இ-ள்) இவ்வுலகத்தின்கண் கரும்பைப் போல அவதரித்துச் சிவந்த பொற்கிரணங்களைக் கொப்பளித்துத் தங்கியிருக்கப் பெற்ற பூங்கொம்பானவர்களே! இந்தப் பெரிய பூலோகத்தினகம் வண்டுகளானவை மாறாமற் குடியாகவிருந்த இசைகள் நீங்காத திண்ணிய புயங்களையுடைய தோன்றலான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் காரணங் ளெல்லாவற்றையும் வகைபெறும் வண்ணம் இவைகள் தாமென்று வரையறுத்து மட்டுக்கட்டிச் சொல்லவல்லவர் யாவர்? ஒருவருமில்லர்.

 

1044. சேயுய ரமரர் பொற்றுஞ் செவ்விய முகம்ம தென்ன

     மாயிரும் புவியுட் டோன்றி மானுட வடிவு கொண்ட

     நாயகர் புதுமை யெல்லா நானெடுத் துரைக்க நானூ

     றாயிர நாவுண் டாகி லதிற்சிறி துரைப்ப னென்றான்.

11

     (இ-ள்) அன்றியும், நீண்ட உயர்ச்சியினையுடைய வானலோகத்தின் கண்ணுள்ள தேவர்களான மலாயிக்கத்துமார்கள்