|
முதற்பாகம்
1066.
சுரும்பிமிர் கரிய
கூந்தற் சுடர்த்தொடி கதீசாத் தன்பா
லரும்புகழ் மைச
றாவை யழைத்தரு கிருத்தி நெஞ்சின்
விரும்பிய வுவகை
கூரக் காரண வேந்தர்க் கன்பாய்ப்
பெரும்புவி
மணத்தின் கோலம் பெற்றிலா தென்கொ லென்றார்.
28
(இ-ள்) குவைலிதென்பவன் அவ்விதம்
இருக்கவே, தேனீக்களொலியா நிற்கும் மலர்மாலை யணிந்த கரிய கூந்தலையும் பிரகாசத்தைக்
கொண்ட வளையல்களையு முடைய கதீஜாநாயக மவர்கள் தங்களது சமூகத்தில் அரிதான கீர்த்தியையுடைய
மைசறாவென்பவனைக் கூப்பிட்டுப் பக்கத்திலிருக்கச் செய்து மனசின்கண் ஆசித்த உவகையானது
அதிகரிக்கும் வண்ணம் காரணங்களையுடைய வேந்தரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களுக்கு அன்பாகப் பெரிய இந்தப் பூமியின்கண் நடைபெறும் விவாகத்தினது கோலமானது இது
பரியந்தம் நடைபெறாதது யாது காரணத்தினாலென்று கேட்டார்கள்.
1062.
கூறிய
மொழியை வேய்க்குங் குயிலுக்குங் கொடுத்துச் செந்தேன்
மீறிய மதுரச்
சொல்லாய் விரும்பிய பயன்க ளியாவுந்
தேறிய கரணம்
போகஞ் செழும்புவி யாக்கை போல
வூறிய வூழி னன்றி
முடியுமோ வுலகத் தென்றான்.
29
(இ-ள்) அவ்வாறு அவர்கள் கேட்ட
மைசறாவென்பவன் அவர்களைப் பார்த்து ஆதியிற் பேசிய வார்த்தைகளைப் புல்லாங்குழலுக்கும்
குயிலுக்கும் கொடுத்து இப்போது செவ்விய தேனானது அதிகரித்த இனிமையினையுடைய வார்த்தைகளைப்
பெற்ற கதீஜா நாயகமே! செழிய இப்பூலோகத்தின்கண் தேர்ச்சியுற்ற கரணம், போகம், யாக்கை
போன்ற நாம் இச்சித்த பயன்களனைத்தும் ஊறப்பெற்ற ஊழ்விதியின் பயனினா லல்லாமல்
இவ்வுலகத்தில் முடியுமா? முடியாதென்று சொன்னான்.
1063.
சினப்படைச்
செழுங்கட் கொவ்வைச் செவ்விதழ் சிறுவெண் மூர
லனப்பெடைக்
கதீசா பால்விட் டடலரி மைச றாமன்
கனப்பெருங்
கவிகை யோங்கக் கடுவிடப் பாந்தண் மாய்த்த
வனப்பிருந்
தொழுகுஞ் சோதி முகம்மதி னிடத்திற் சார்ந்தான்.
30
(இ-ள்)
அவ்விதஞ் சொன்ன வலிமை கொண்ட சிங்கமாகிய மைசறாவென்னு மரசனானவன் பகைவர்மேற் கோபியா
நிற்கும் வாளாயுதம் போன்ற கண்களையும் கொவ்வைக்கனி போன்ற சிவந்த அதரங்களையும்
வெண்ணிறத்தைப் பெற்ற சிறிய
|