பக்கம் எண் :

சீறாப்புராணம்

410


முதற்பாகம்
 

பற்களையும் பெட்டையன்னம் போன்ற நடையினையுமுடைய கதீஜா நாயகமவர்களின் இடத்தை விட்டும் நீங்கிப் பெரிய மேகக் குடையானது ஆகாயத்திலோங்கும் வண்ணம் கொடிய சர்ப்பத்தை வதை செய்த அழகானது இருந்தொளிர்கின்ற பிரகாசத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் வந்து சேர்ந்தான்.

 

1064. வந்துதாள் வழுத்திச் செவ்வி மலர்க்கொடி கனவுங் காதற்

     சிந்தையு ணினைவும் வேதந் தெளிந்தவ னுரையுந் தேனார்

     கொந்தலர் மரவ மாலைக் குவைலிது மகிழ்வுங் கூறிட்

     டந்தரங் கத்திற் சொன்னா னாண்மையு மறிவு மிக்கான்.

31

     (இ-ள்) வலிமையும் அறிவும் மிகுத்தவனான அம்மைசறாவென்பவன் அவ்வாறு வந்து சேர்ந்து நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் இருபாதங்களையுந் துதித்து அழகிய பூங்கொம்பாகிய கதீஜாநாயகமவர்கள் கண்ட சொப்பனத்தையும், அவர்களின் ஆசை கொண்ட மனசினகமுள்ள எண்ணத்தையும், வேதங்களைத் தெளிந் தறிந்தவனான உறக்கத் தென்பவன் சொல்லிய வார்த்தைகளையும், தேன் நிறைந்த பூங்கொத்துகளைப் பெற்ற குங்கும மாலையணிந்த குவைலிதென்பவரின் மகிழ்ச்சியையும் பிரித்து இரகசியமாகச் சொல்லினான்.

 

1065. மானவேற் றடக்கை வீரன் மைசறா வசனங் கேட்டுக்

     கானம ருடலு முள்ளக் கருத்தும்பூ ரித்துச் சிந்தித்

     தானவ னருளை யுன்னி யகத்தினி லடக்கி யுண்மைத்

     தூநெறி வழுவா வள்ளற் றோற்றிடா வுவகை கொண்டார்.

32

     (இ-ள்) அவ்விதம் சொல்லிய கீர்த்தி பெற்ற வேலாயுதந் தாங்கிய நீண்ட கையினையுடைய வீரனாகிய அம் மைசறா வென்பவனின் வார்த்தைகளைச் சத்தியத்தையுடைய பரிசுத்தமான சன்மார்க்கத்திற் றப்பாத வள்ளலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களிரு காதுகளினாலுங் கேள்வியுற்று கஸ்தூரி வாசனை தங்கிய தங்களது சரீரமும் மனத்தினது கருத்தும் பருத்து ஆலோசித்து ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் திருவருளை இருதயத்தின்கண் நினைத்து அடக்கிக் கொண்டு ஒரு காலத்திலுமுண்டாகாத சந்தோஷத்தை யடைந்தார்கள்.

 

1066. பொற்றொடிக் கதீசா பாதம் போற்றிய மைச றாசொல்

     வெற்றியுங் குவைலி தென்னும் வேந்தனுக் குறக்கத் தோதும்

     பெற்றியின் மகிழ்ந்த வாறும் பெட்புறு கனவி னாலங்

     குற்றவை யனைத்துந் தந்தைக் குரைப்பதற் குன்னி னாரால்.

33