முதற்பாகம்
வெண்ணிறத்தைக்
கொண்ட பெட்டையன்னங்கள், தங்களின் மனமான தன்புறும்படி தஞ்சேவல்களின் சிறகுகளினது நிழலில்
ஒதுங்கித் தாமரை மலராகிய ஆசனத்தில் வீறுடன் இராநிற்கும்.
74.
ஏல வார்குழற்
கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ்
சோலை வாய்தொறு
முக்கனித் தேன்மழை சொரியு
மாலை
வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடு
நீல வாய்மலர்
வாவிகள் பெருங்கட னிகர்க்கும்.
54
(இ-ள்) அன்றியும், மாதர்கள்
வாசனையைக் கொண்ட நெடிய கூந்தலுக்கு இடுகின்ற அகிற் புகையானது மேகங்களோடு விரோதியா
நிற்கும், சோலைகளினிடந்தோறும் வாழை, பலா, மாவென்னும் முப்பழங்கள் தேனினது மழையைப்
பொழியா நிற்கும். ஆலைகளினிடந்தோறும் கரும்பை யுடைத்து அதன் சாறாகிய ஆறானது எடுத்தோடா
நிற்கும் நீலநிறத்தைப் பெற்ற வாயையுடைய குவளைப் புஷ்பத்தினது தடாகங்கள் பெரிய
சமுத்திரத்தைப் பொருவாநிற்கும்.
75.
தெருளு றும்படி
தேன்றுளி தெறித்திடச் சிதறிப்
பொருத லைத்திடு
மாங்கனி தேங்கனிப் பொழிலே
மரும ணம்பெறுஞ்
சந்தகில் சண்பக வனத்திற்
றருவெ னும்பெயர்
பெறச்சிறந் தீந்திருந் தனவே.
55
(இ-ள்) அன்றியும், தெளிவு
பொருந்தும் வண்ணம் தேனினது திவலையானது, தெறிக்கச் சிதறுத லுற்றுப் பொருது அலையாநிற்கும்
மாம்பழத்தினது நறவமானது, கனியப்பெற்ற சோலைகளானவை மிகுந்த வாசனையைப் பெறும் சந்தனம்,
அகில், சண்பகம், ஈத்தமாகிய மரங்களையுடைய வனத்தில் தருவென்னும் அபிதானத்தையடையும்படி
சிறப்புற்றிருந்தன.
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
76.
நினைக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர்
நிந்தனை சிந்தனை யிலையே
யினக்கருஞ்
சுரும்பு மதுத்துளி யருந்து
மிவையலான் மதுப்பிறி திலையே
சினக்கரி
முனைக்கோட் டிளமுலைப் புலவி
திருத்தும்பொய் யலதுபொய் யிலையே
வனக்கனி
கறுத்த குலைக்கள வலது
மறுத்தொரு கொலைகள விலையே
56
(இ-ள்) அன்றியும், கருதாநிற்கும் பொன்னாகிய பொருளே நிந்தனையானது வேறே நிந்தனையாகிய
எண்ணமொன்றுமில்லை. கருநிறத்தையுடைய கூட்டமாகிய வண்டுகள் கள்ளினது
|