|
முதற்பாகம்
தலைவர்களென்று
சொல்லித் தங்களின் வார்த்தைகளையுடைய நாவினை நீட்டிப் பேசப் பயமுற்றிருந்தார்கள்.
1075.
அந்நெறி
யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம்
நன்னெறி
மொழிக்க தீசா மனையினி னடந்த செய்தி
யின்னணங் கேட்டோஞ்
செல்வ மணத்தினுக் கிசைந்த தூது
முன்னுதல் பொருளே
யென்ன யாவரு மொழிந்தா ரன்றே.
42
(இ-ள்) அவர்கள் அவ்விதம் பயமுற்றிருந்த
முறைமையினால் நாங்களும் அப்பெண்ணைக் கேட்பதற்குச் சமுசயமாயினோம். ஆனால் இவ்வண்ணம் நல்ல
சன்மார்க்க வார்த்தைகளையுடைய அந்தக் கதீஜாவின் வீட்டின்கண் நடைபெற்ற சமாச்சாரங்களை நாங்கள்
கேள்வியுற்றோம். இனிச் செல்வத்தையுடைய விவாகத்திற்குப் பொருந்திய தூதை முன்னாக அனுப்பி வைத்தலே
பொருளென்று அப்பாசு முதலிய யாவர்களும் சொன்னார்கள்.
1076.
வல்லமை யறிவிற்
றேர்ந்த வார்த்தையுத் தரத்திற் சூழ்ச்சிச்
சொல்லினுட்
பொருளி னுட்பத் துடரறிந் துரைக்க வேண்டி
னல்லெழி லமுசா
வல்லா னகரின்மற் றுண்டோ வென்னப்
பல்லரும் போற்று
மாற்றம் பகர்ந்தன ரபுத்தா லீபே.
43
(இ-ள்) அவ்விதம் அவர்கள் சொல்ல
அதைக் கேட்ட அபீத்தாலிபவர்கள் சமர்த்தான புத்தியினாலும் தெளிந்த வார்த்தைகளினது உத்திரத்தினாலும்
ஆலோசனையையுடைய பேச்சுகளின் அகப்பொருளினாலும் நுண்ணிய தொடர்பினை அறிந்து பேச வேண்டுமானால்
நல்ல அழகினையுடைய ஹம்சா அல்லாமல் இந்தத் திருமக்கமா நகரத்தின்கண் வேறேயொருவருள்ளரா? இல்லரென்று
யாவர்களும் துதியா நிற்கும் ஒரு சமாச்சாரத்தைச் சொன்னார்கள்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய
விருத்தம் (வேறு)
1077.
திறலறிவ
ரபித்தாலி புரைத்தமொழி
யனைவருந்தஞ்
சிந்தை கூர்ந்து
துறுமலர்ப்பொற்
புயத்தமுசா தமையழைத்து
மணமொழியைத்
தொகுத்துப் பேசி
நிறைநிலைமை தவறாத
குவைலிதுபா
லினிதேகி
நிகழ்த்து வீரென்
றறைதருமுன் னவர்மாற்றம்
பின்னவருந்
தலைமேற்கொண்
டன்பு கூர்ந்தார்.
44
(இ-ள்) திறத்த அறிவினை யுடையவர்களான
அபீத்தாலி பவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளுக்கு அப்பாசு முதலிய
|