|
முதற்பாகம்
யாவர்களும் மனங்கூர்ந்து
நெருங்கிய புஷ்பமாலை யணிந்த அழகிய தோள்களையுடைய ஹம்சா அவர்களைக் கூப்பிட்டு நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் விவாகத்தினது பேச்சுகளை ஒழுங்காய்ப் பேசி நீவிர் இனிமையுடன்
மாட்சிமை தங்கிய உண்மையில் தப்பாத குவைலிதிடத்திற் சென்று சொல்லுமென்று சொல்ல முன்னமே
தனது தமையன்மாரான அவர்களின் வார்த்தைகளைத் தம்பியாகிய ஹம்சா அவர்கள் தங்களின் சிரமேற்கொண்டு
அன்புற்றார்கள்.
1078.
மனமகிழ்வு மனக்களிப்பு
மருங்குவர
வெழுந்தமுசா
வாயி னீங்கி
யினமணியொண் கதிர்மாடத்
திடுமணிவில்
லெறிப்பவட
லேறு போலத்
தினகரன்மெய் மறுகுமணி
மறுகூடு
மறுகாது சென்று
நீங்காக்
கனகமழை பொழிமேகங்
குவைலிதுவாழ்ந்
திருந்ததலைக்
கடையிற் சார்ந்தார்.
45
(இ-ள்) அவ்விதம் அன்புற்ற ஹம்சா அவர்கள்
தங்களது பக்கத்தில் மனமகிழ்ச்சியும் மனக்களிப்பும் தொடர்ந்து வரும் வண்ணம் எழும்பி அவ்வீட்டினது
வாயிலைக் கடந்து வலிமையையுடைய ஆண் சிங்கத்தைப் போலச் சுழற்சியடையாது ஒள்ளிய கிரணங்களைக்
கொண்ட மாடங்களில் பதித்து வைத்த இரத்தினவர்க்கங்கள் அழகிய பிரகாசத்தை நானாபக்கங்களிலும்
வீசச் சூரியன் தனது சரீரமானது மறுக்கமடையா நிற்கும் அலங்காரங்களையுடைய தெருவின் நடுவாய் நடந்து
மாறாத பொன்மாரி பொழிகின்ற மேகமாகிய குவைலிது வாழ்ந்திருக்கும் வீட்டினது தலைவாயலிற்
போய்ச் சேர்ந்தார்கள்.
1078.
அபுத்தாலிப்
திருத்துணைவ ரறத்தாறு
வழுக்காத
வண்ண னீங்காக்
கவுட்டான மொழுகுமுரட்
கரித்தானை
நெருங்குமணிக்
கடையி லாகிப்
புவித்தாரை நடத்திமறு
புறத்தேசப்
பொருளனைத்தும் பொருப்பு போலக்
குவித்தானை சொலற்கரிய
குலத்தானைக்
குவைலிதைக்கண்
குளிரக் கண்டார்.
46
(இ-ள்) அபீத்தாலி பவர்களின் அழகிய
சகோதரரும் தரும நெறியிற் சறுகாத அண்ணலுமாகிய ஹம்சா அவர்கள் மாறாத கவுளினது மதமொழுகா நிற்கும்
வலிமையினையுடைய யானைப்படைகள் நெருங்குகின்ற இரத்தினவர்க்கங்கள் பதித்த
|