பக்கம் எண் :

சீறாப்புராணம்

416


முதற்பாகம்
 

அந்தக் கடைவாயலின்கண் அவ்வாறு போய்ச் சேர்ந்துப் பூலோகத்திலுள்ள பலவழிகளிலும் ஜனங்களை நடத்தி வியாபாரத் தொழிலினால் அன்னிய தேசங்களினது பொருள்க ளெல்லாவற்றையும் மலைகளைப்போலக் குவித்தவனைச் சொல்லுதற்கரிய குலத்தையுடையவனை, குவைலிதென்னும் அபிதானத்தையுடையவனைத் தங்களி னிருகண்களும் குளிர்ச்சியடையும்படி பார்த்தார்கள்.

 

1080. இருந்தவனு மெதிராகி ஹமுசாத

        னெழிற்கரந்தன் கரத்தி லேந்திப்

     பெருந்தவிசி னினிதிருத்தி யருகிருந்து

        பிரியமொழி பேசிப் பேசி

     விரிந்தபிள வரிந்தவிலைக் கருப்பூர

        முடனளித்து வெற்றி வேந்தே

     யருந்தவமே யெனப்போற்றி யிவணடைந்த

         வரலாறே தறியே னென்றான்.

47

      (இ-ள்) அப்போது அவ்விடத்தில் தங்கியிருந்தவனாகிய குவைலிதென்பவனும் எழுந்து எதிராகச் சென்று ஹம்சா அவர்களின் அழகிய கைகளைத் தனது கைகளினால் தாங்கி இனிமையுடன் பெரிய ஓராசனத்தின் மேல் இருக்கும்படி செய்து தானும் பக்கத்திலிருந்து கொண்டு விருப்பமான வார்த்தைகளை மிகவும் பேசிக் கருப்பூரத்தோடு விரிவுற்ற அடைக்காயின் பிளவுகளையும் காம்பரிந்த வெற்றிலைகளையும் கொடுத்து விஜயத்தையுடைய அரசரானவர்களே! அரிய தவமானவர்களே! என்று சொல்லித் துதித்துத் தாங்கள் இவ்விடம் வந்து பொருந்திய வரலாறு யாது? அதையானறிய மாட்டேன் சொல்லுங்க ளென்று கேட்டான்.

 

1081. தெரிந்தமறை முறையாலுந் தேர்ந்தவர்சொற்

        றெளிவாலுந் தெருண்ட மேலோ

     யருந்தவமா யெம்மினத்தோ ராருயிரா

        யருமருந்தா யப்துல் லாபா

     லிருந்தமணி யாயுதித்த முகம்மதெனும்

        விடலைகருத் தினிது கூரப்

     பொருந்தமண முடிப்பதற்கு வந்தேனென்

        றினையமொழி புகல்வ தானார்.

48

      (இ-ள்) அவன் அவ்விதம் கேட்க ஹம்சா அவர்கள் வேதங்களைக் கற்றுணர்ந்த முறைமையினாலும் தெளிந்த மகாத்துமாக்களின் வார்த்தைகளினது தேர்ச்சியினாலும் தெளிவடைந்த மேன்மையையுடைய குவைலிதே!